சென்னை : சென்னையில் காய்கறி கடை வியாபாரியை அரிவாளால் வெட்டி கொலை செய்த 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
சென்னை எருக்கஞ்சேரி பகுதியில் வசித்து வரும் கோபி என்பவர் கொடுங்கையூர் முத்தமிழ் நகரில் காய்கறி கடை மற்றும் மலர் நிலையம் கடந்த ஐந்து ஆண்டுகளாக நடத்தி வருகிறார். இவரது கடைக்கு அருகில் பிளாட்பார கடை நடத்தி வரும் ஆனந்த் மற்றும் அரவிந்த் ஆகியோருடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் நேற்று மாலையில் தகராறு முற்றியுள்ளது. இதில் ஆனந்த் மற்றும் அரவிந்த் அவர்களது 3 நண்பர்களுடன் சேர்ந்து கோபியை அரிவாளால் வெட்டியுள்ளனர். ரத்த வெள்ளத்தில் சரிந்த கோபி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அப்போது தடுக்க முயன்ற கோபியின் மனைவி லதாவையும் அவர்கள் வெட்டியுள்ளனர். இதில் படுகாயமடைந்த லதாவின் அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் ஓடி வந்துள்ளனர். அவர்கள் வருவதை பார்த்து அந்த கும்பல் தப்பியோடினார். இதையடுத்து படுகாயமடைந்த லதாவை மீட்டு சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கொடுங்கையூர் காவல் துறையினர் கோபியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்து, குற்றவாளிகளான ஆனந்த், அரவிந்த் மற்றும் அவர்களது கூட்டாளிகள் மீது வழக்கு பதிவு செய்து வலைவீசி தேடி வருகின்றனர்.
சன்டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பான சீரியல் சுந்தரி. இல்லத்தரசிகளை கட்டிப்போட்ட சீரியலுக்கு சொந்தக்காரியாக இருப்பவர் கேப்ரில்லா. கிராமத்து பெண்ணாக கலக்கிய…
வழக்கில் சிக்கிய ரஹ்மான் இசைப்புயல் எனவும் ஆஸ்கர் நாயகன் எனவும் கொண்டாடப்படுபவர் ஏ.ஆர்.ரஹ்மான். கிட்டத்தட்ட 33 வருடங்களாக இந்திய சினிமாவின்…
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரம் பகுதியில் பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்து கிடப்பதாக போலீசாருக்கு…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த தொண்டன் துளசி பகுதியில் உள்ளது பிரபல தொழிலதிபரும் சாய் சுப்ரபாதம் ஹோட்டல் மற்றும் ஆங்கர்…
நண்பேன்டா! சந்தானமும் ஆர்யாவும் முதன் முதலில் இணைந்து நடித்த திரைப்படம் “ஒரு கல்லூரியின் கதை”. இத்திரைப்படத்தில் பணியாற்றிய சமயத்தில் இருவரும்…
விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பல்வேறு போட்டியாளர்கள் கலந்து கொண்டு தற்போது பிரபலமாக உள்ளனர். அந்த வரிசையில் போட்டியாளராக…
This website uses cookies.