நம்பர் பிளேட் இனி இப்படித்தான் இருக்கனுமாம்!!…..போக்கு வரத்து போலீசார் அறிவுரை….வாகன ஓட்டிகளே உஷார்!!!!

By: Aarthi
5 October 2020, 9:56 am
traffic rules - updatenews360
Quick Share

சென்னை: வாகனங்களின் நம்பர் பிளேட்டுகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்று போக்குவரத்து போலீசார் அறிவுரை வழங்கியுள்ளனர்.

சென்னை நகர போக்குவரத்து போலீசார் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில் பல்வேறு அறிவுரைகளை வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

அனைத்து தனியார் வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளும், வெள்ளை கலரில் இருக்க வேண்டும். அவற்றில் உள்ள எழுத்துக்கள் கருப்பு கலரில் எழுதப்பட்டிருக்க வேண்டும். வர்த்தக வாகனங்களிலும் மஞ்சள் கலரில் நம்பர் பிளேட்டுகளும், அவற்றில் உள்ள எழுத்துக்கள் கருப்பு கலரிலும் இருக்க வேண்டும்.

70 சி.சி.க்கு குறைவான என்ஜின் திறன் கொண்ட இருசக்கர வாகனங்களில், முன் எழுத்துக்கள் உயரம் 15 மி.மீட்டரிலும், அதன் தடிமன் 2.5 மி.மீட்டரிலும் எழுதப்பட்டிருக்க வேண்டும். அனைத்து இரு சக்கர வாகனங்களின் பின் எழுத்துக்கள் உயரம் 35 மி.மீட்டரிலும், தடிமன் 7 மி.மீட்டரிலும், இடைவெளி 5 மி.மீட்டரிலும் இருக்க வேண்டும்.

500 சி.சி.க்கு அதிகமான எஞ்சின் திறன் கொண்ட 3 சக்கர வாகனங்களில் முன், பின் நம்பர் பிளேட்டுகளில் உள்ள எழுத்துக்கள் 40 மி.மீட்டர் உயரம் கொண்டதாகவும், தடிமன் 7 மி.மீட்டரிலும் இருக்க வேண்டும். இதர அனைத்து மோட்டார் வாகனங்களுக்கும், முன், பின் நம்பர் பிளேட்டுகளில், உள்ள எழுத்துக்கள் 65 மி.மீட்டர் உயரத்திலும், தடிமன் 10 மி.மீட்டரிலும் இருக்கலாம். இடைவெளி 10 மி.மீட்டர் வேண்டும்.

2019 ஏப்ரல் 1ம் தேதிக்கு பிறகு புதிதாக பதிவு செய்த வாகனங்கள் அனைத்திலும் உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட்டுகள் பொருத்தப்பட வேண்டும். இந்த விதிமுறைகளை பின்பற்றாதவர்கள் மீது மோட்டார் வாகன சட்ட விதிகளின் படி நடவடிக்கை எடுக்கப்படும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 45

0

0