சரக்கு வாகனத்தின் மீது பைக் மோதி விபத்து..சக்கரத்தில் சிக்கிய வாகன ஓட்டி : நெஞ்சை பதற வைக்கும் காட்சி!!

Author: kavin kumar
2 February 2022, 8:05 pm

கோவை : கோவை அருகே சரக்கு வாகனத்தின் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 29ம் தேதியன்று கோவை-பொள்ளாச்சி சாலையில் உள்ள சிட்கோ தொழிற்பேட்டையின் முன்பு உள்ள பாலத்தில் இருந்து கீழே இறங்கிய இரு சக்கர வாகனம், சிட்கோவில் இருந்து வெளியே வந்த சரக்கு வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போத்தனூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில் விபத்தில் உயிரிழந்த இளைஞர் வடவள்ளி பகுதியை சேர்ந்த நிஷாந்த்ராஜ்(22) என்பதும்,

தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் நிலையில் இரவு நேர பணி முடிந்து வீடு திரும்பும் போது விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. மேலும் விபத்தை ஏற்படுத்தி விட்டு நிறுத்தாமல் சென்ற சரக்கு வாகன ஓட்டிநரை காவல்துறை தேடி வருகின்றனர். இந்த நிலையில் விபத்து ஏற்பட்ட சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இதில் சரக்கு வாகனத்தில் மோதியதில் உயிரிழந்த இளைஞரின் உடலை சரக்கு வாகனம் இழுத்து செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது.

  • 12th fail fame Vikrant Massey will leave Cinema பிரபல நடிகர் சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவிப்பு.. அதிர்ச்சியில் திரையுலகம்!
  • Views: - 1244

    0

    0