மலைகளின் ராணியை பார்க்க படையெடுத்த வாகனங்கள்! இ-பாஸ் தளர்வால் ஆல் பாஸ்!!
18 August 2020, 10:19 amநீலகிரி : இ.பாஸ் தளர்வு காரணமாக வெறிச்சோடி கிடந்த நீலகிரி மலைக்கு வாகனங்கள் படையெடுக்க துவங்கியதால் நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில், கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்ததால், பாதிப்பை தவிர்க்க, மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுத்துள்ளது. இதில் இ.பாஸ் நடைமுறை கட்டுப்பாடுகளால், சுற்றுலா மையங்கள் அதிகமுள்ள நீலகிரியில் வாகனங்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது.
இந்நிலையில், தமிழக அரசு இ.பாஸ் முறையில் தளர்வு அளித்துள்ளதால், ஏராளமானோர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டதால் குன்னூர் பர்லியார் சோதனை சாவடி வழியாக ஏராளமான வாகனங்கள் வர துவங்கியுள்ளது.
இங்கு இ.பாஸ் பெற்று வருபர்களுக்கு கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டு வருவதுடன் வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. மலைப்பாதையில் இதுவரை வாகனங்களின் எண்ணிக்கை குறைவாக இருந்த நிலையில் தற்போது வாகன நெரிசல் ஏற்பட்டு வருகிறது.