வேல் யாத்திரை தடையின்றி நடைபெற வேண்டும் : திருப்பதியில் எல்.முருகன் தரிசனம்!!

16 November 2020, 11:55 am
Murugan - Updatenews360
Quick Share

ஆந்திரா : பாரதிய ஜனதா கட்சியின் வெற்றிவேல் யாத்திரை தடை இன்றி நடைபெற ஏழுமலையானின் வேண்டி கொண்டதாக திருப்பதியில் தரிசனம் முடிந்த பின் தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் முருகன் தெரிவித்துள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் வேல்முருகன் இன்று காலை விஐபி பிரேக் தரிசனத்தில் ஏழுமலையானை வழிபட்டார். சாமி கும்பிட்ட பின் அவருக்கு தேவஸ்தானம் சார்பில் தீர்த்தப் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

தொடர்ந்து கோவிலுக்கு வெளியே நிருபர்களிடம் பேசிய அவர், கொரோனாவின் பிடியிலிருந்து நாட்டு மக்கள் விரைவில் விடுபட்டு சுக சந்தோசத்துடன் வாழ அருள்புரிய வேண்டும் என்றும், இம் மாதம் ஆறாம் தேதி திருத்தணியில் துவங்கி டிசம்பர் ஏழாம் தேதி திருச்செந்தூரில் நிறைவடைய இருக்கும் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் வெற்றிவேல் யாத்திரை தடை இன்றி நடைபெற அருள் புரிய வேண்டும் என்றும் ஏழுமலையானிடம் வேண்டி கொண்டேன் என்று அப்போது கூறினார்.

Views: - 26

0

0