புன்னகையை சிந்திய வேலம்மாள் பாட்டியின் சோக வாழ்க்கை: உதவிக்கரம் நீட்டிய பாஜக எம்எல்ஏ

Author: Udhayakumar Raman
22 November 2021, 11:35 pm
Quick Share

கன்னியாகுமரி: கன்னியாகுமரி அருகே மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மூதாட்டி வேலம்மாள்ளை பாஜக சட்டமன்ற உறுப்பினர் காந்தி மூதாட்டியை நேரில் சந்தித்து அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.பழையாறு, தாமிரபரணி ஆறு, இரணியல் வள்ளியாறுகள் நிரம்பியதை அடுத்து, உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால் கரையோர கிராமங்கள் வெள்ள நீரில் மிதக்கின்றன. இந்த சூழலில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கீழகலுங்கடி பகுதியைச் சேர்ந்த மூதாட்டி வேலம்மாள் கண்ணீர் மல்க உதவிகோரி பல்வேறு அரசியல் கட்சிகளுக்கும் கோரிக்கை விடுத்திருந்தார்.இதையறிந்த பாஜக சட்டமன்ற உறுப்பினர் காந்தி மூதாட்டியை நேரில் சந்தித்து தேவையான அரிசி, காய்கறி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.

Views: - 345

0

0