வெள்ளலூர் குப்பைக் கிடங்கு விவகாரம்.. பாஜக எம்பி தினேஷ் சர்மாவிடம் குறிச்சி – வெள்ளலூர் மாசு தடுப்புக் கூட்டுக்குழு மனு!
வெள்ளலூர் குப்பைக் கிடங்குக்கு தொடர்ந்து எதிர்ப்பு எழுந்து வரும் நிலையில், குறிச்சி-வெள்ளலூர் மாசு தடுப்பு குழு இன்று நாடாளுமன்ற உறுப்பினர் திரு.தினேஷ் சர்மா அவர்களுக்கு மனு ஒன்றை அளித்துள்னர்.
அதில், வெள்ளலூர் குப்பைக்கிடங்கை மூட கோரிக்கை திடக்கழிவு மேலாண்மை விதிகள்-2016-ஐ மீறுவதாகவும், நிலத்தடி நீர், காற்று மற்றும் தாங்க முடியாத துர்நாற்றம் ஆகியவற்றின் கடுமையான மாசுபாடு காரணமாக குடியிருப்பாளர்களின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
குறிச்சி-வெள்ளலூர் மாசு தடுப்பு நடவடிக்கை குழு கோரிக்கையை பணிவுடன் சமர்ப்பிக்கிறது.
மாண்புமிகு நாடாளுமன்ற உறுப்பினர் திரு.தினேஷ் சர்மா ஜி அவர்கள், தமிழ்நாடு, கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள போத்தனூர் வெள்ளளூர் குறிச்சி கிராமத்தில் உள்ள வெள்ளலூர் குப்பைக் கிடங்கினால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் மற்றும் சுகாதாரக் கேடுகளின் பிரச்சனைகளை எடுத்துரைக்க சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு இக்குழு சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோயமுத்தூர் கார்ப்பரேஷன் இந்த வெள்ளலூர் டம்ப் யார்டை (2003 முதல்) எந்த சரியான ஒப்புதல் அனுமதியுமின்றி நடத்தி வருகிறது. கோவை மாநகராட்சி எல்லையின் கீழ் நாளொன்றுக்கு தோராயமாக 1200 டன் குப்பைகள் உருவாகின்றன மற்றும் லாரிகளில் குப்பைகளை ஏற்றி வெள்ளலூர் டம்ப் யார்டுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
இதிலிருந்து 550 டன் கழிவுகளை பதப்படுத்தும் UPL நிறுவனத்துக்கு பயோ-மைனிங்கிற்காக வழங்கப்பட்டு, மீதமுள்ள 650 டன் கழிவுகள் முறையாக பிரிக்கப்படாமல் வெள்ளலூர் துனிப் பேட்டையில் கொட்டப்படுகிறது.
மொத்த தினசரி கழிவு 550 டன்களில், கோயம்புத்தூர் மாநகராட்சி 20% (அதாவது. 110 டன்) மட்டுமே தரம் பிரிக்கப்பட்ட குப்பைகளாக வழங்குவதாகவும், மீதமுள்ள 80% (ஐசி. 440 டன்) பிரிக்கப்படாதவை என்றும் கழிவுப் பதப்படுத்தும் நிறுவனம் தெளிவாகக் கூறியது.
பிரிக்கப்படாத கழிவுகள் செயலாக்கத்திற்கு ஏற்றதாக இல்லை என்பதால், இந்த 440 டன் பிரிக்கப்படாத கழிவுகள் 650 டன் பிரிக்கப்படாத கழிவுகளுடன் கொட்டப்படுகிறது. மொத்தத்தில், ஒரு நாளில் கொட்டப்படும் பிரிக்கப்படாத கழிவுகளின் மொத்த அளவு சுமார் 1090 டன்.
இந்த குப்பை கிடங்கானது குறிச்சி, போத்தனூர், கோணவாய்க்கால் பாளையம் மற்றும் வெள்ளலூர் பகுதிகளின் எல்லைகளை கொண்டது.
ஏறக்குறைய 1.5 லட்சம் மக்கள் இந்த பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர். குப்பை கிடங்கால் நிலத்தடி நீர் மாசடைந்து பொதுமக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதற்கிடையில், 2020 ஆம் ஆண்டு TNPCB கோவை மாநகராட்சிக்கு 80 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது. அதே போல தேசிய பசுமை தீர்ப்பாயத்துக்கு கோவை மாநகராட்சிக்கு எதிராக மனுவும் அளிக்கப்பட்டது. அந்த மனு தற்போது விசாரணையில் இருந்து வருகிறது. இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை வரும் 22ஆம் தேதி மீண்டும் வருகிறது.
ஆனால் கோவை மாநகராட்சி வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் தேங்கியிருக்கும் 7 ஆயிரம் டன் கழிவுகளை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இது குறித்து நடவடிக்கை எடுக்க கோவை மாநகராட்சிக்கு பல முறை பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதையடுத்து இந்த விவகாரத்தை மாண்புமிகு நாடாளுமன்ற உறுப்பினர் திரு தினேஷ் சர்மா கவனத்திற்கு கொண்டு வந்துள்ளோம்.
10 க்கும் மேற்பட்ட பள்ளிகள் கல்லூரிகள், மருத்துவமனைகள் மற்றும் முதன்மை ஹெசித் மையம் மற்றும் நூற்றுக்கணக்கான குடியிருப்பு பகுதிகளுக்கு நடுவே குப்பை கொட்டு வருகின்றது.
TNPCB நடத்திய சர்வேயில் நிலத்தடி நீரின் தரம் மிகவும் மோசமாக பாதிப்படைந்துள்ளது மற்றும் TDS அளவுகள் வழக்கத்திற்கு மாறாக அதிகரித்துள்ளதால் ஆபத்துகடள விளைவிக்கும் என தெரிவித்துள்ளது.
காற்று மாசு, துர்நாற்றத்தால் மக்கள் பெரிதும் பாதிக்கப்ப்டடுள்ளனர். குறிப்பாக குழந்தைகள், முதியவர்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
குறிச்சி-வெள்ளலூர் மாசு தடுப்பு கூட்டுக்குழு மற்றும் போத்தனூர் மற்றும் வெள்ளலூர் பகுதி மக்கள் சார்பாக தங்களுக்கு தாழ்மையுடன் வேண்டுகோள் விடுக்கிறோம்!
இப்பகுதி மக்களின் உயிரைக் காப்பாற்றுவதற்காக மாண்புமிகு இந்திய அரசாங்கத்தின் சுற்றுச்சூழல்,காடு மற்றும் காலநிலை மாற்றத்திற்கான அமைச்சகத்துக்கு இந்தப் பிரச்சினைகளை நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் சர்மா அவர்கள் எடுத்துரைக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.