ஏடிஎம் பின் நம்பர் கேட்டு பண மோசடி.! சிக்கிய முக்கிய குற்றவாளி.!!

7 August 2020, 2:42 pm
ATM Number Fraud - Updatenews360
Quick Share

வேலூர் : ஏடிஎம் பின் நம்பர் மூலம் நாடு முழுவதும் கொள்ளையடிக்கும் கும்பலின் முக்கிய குற்றவாளிகளை கைது செய்த காவல்துறை கணினி, லேப்டாப் போன்ற சாதனங்களை பறிமுதல் செய்தனர்.

வேலூர் மாவட்டம் வேலூர் சைதாப்பேட்டை பகுதியிலுள்ள பாபு என்பவருக்கு சொந்தமான வீட்டில் ஒரு நபர் வீடு வாடகைக்கு எடுத்து ஒரு அறையில் கணினி விற்பனை செய்யும் முகவர் என்று கூறி அங்கு அலுவலகம் ஒன்றை திறந்துள்ளார் .

அங்கு அலுவலகம் திறந்து கணினி பேட்டரி மூலம் இயங்கவும் காலையில் வீட்டின் உரிமையாளரே கணினியை ஆன் செய்யவும் ஆப் செய்யவும் கூறி அதற்காக மாதம் 6 ஆயிரம் வாடகையை கொடுத்துள்ளார்.

இந்த நிலையில் திருச்சியில் இந்த கும்பல் சேர்ந்த ஒருவன் நேற்று சிக்கியுள்ளான். இவர்களின் வேலை, நாட்டில் பல இடங்களில் இது போன்ற அலுவலகங்களை திறந்து கணினிகளை வைத்து வங்கியின் மேலாளர் பேசுவதாக கூறி அவர்களின் செல்போனிற்கு வரும் ஓடிபி நம்பரை பெற்று பணத்தை அவர்களுக்கு தெரியாமல் திருடி வந்துள்ளனர்.

இதற்காக ஆங்காங்கே உள்ள அலுவலகங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஒரு இடத்தில் பணத்தை எடுத்தால் வேறு இடம் போல் ஜிபிஎஸ்ஸில் காட்டுவதால் இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ள குற்றவாளிகளை கைது செய்வதில் காவல்துறை பெருடம சவாலாக இருந்தது.

இந்த நிலையில் கும்பலில் முக்கிய குற்றவாளி ஒருவன் திருச்சியில் சிக்கியதையடுத்து அவன் அளித்த தகவலின் பேரில் வேலூரில் செயல்பட்டு அலுவலகத்தை சோதனை செய்தனர். அதில் கணினி லேப்டாப் இரண்டு இன்வர்டர் பேட்டரிகளை பறிமுதல் செய்தனர். இந்த கும்பல் நாடு முழுவதும் பல்வேறு சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டு தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 8

0

0