பெண் காவலருக்கு கொரோனா.! காட்பாடி காவல்நிலைய காவலர்கள் ஷாக்.!!
11 August 2020, 4:14 pmவேலூர் : காட்பாடி காவல் நிலையத்தில் பெண் காவலர் ஒருவருக்கு கொரானா தொற்று உறுதியானதால் 50க்கும் மேற்பட்ட காவலர்களுக்கு கொரோனா பரிசோதனை நடைபெற்றது.
வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியில் பல்வேறு பணிகளுக்காக காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். மேலும் கொரோனா வைரஸ் பெற்று தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் பல்வேறு பணிகளிலும் காவலர்கள் தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் காவலர்களுக்கும் வைரஸ் தொற்று ஏற்படுகிறது. வேலூர் மாவட்டம் காட்பாடி காவல் நிலையத்தில் பெண் காவலர் ஒருவருக்கு கொரானா தொற்று நேற்று உறுதியானது. இந்நிலையில் இன்று காட்பாடி, விருதம்பட்டு, லத்தேரி, பொன்னை, திருவலம் உள்ளிட்ட காட்பாடி தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு காவல் நிலையங்களில் அனைத்து காவலர்களுக்கும் காட்பாடி காவல் நிலையத்தில் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு அந்த இடத்தில் கொரானா பரிசோதனை செய்யப்பட்டது.
இதில் அனைத்து காவலர்களும் பங்கேற்று தங்களை பரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்டனர் பள்ளிக்குப்பம் ஆரம்ப சுகாதார மையம் மருத்துவர் வெங்கடலட்சுமி தலைமையில் நடைபெற்ற இந்த மருத்துவ முகாமில் 50க்கும் மேற்பட்ட காவலர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் காட்பாடி காவல் ஆய்வாளர் காண்டீபன் காட்பாடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் மனோகர் திருவலம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் பிச்சாண்டி உட்பட பலர் கலந்து கொண்டனர்.