கொளுந்தியா மீது கொளுந்து விட்ட ஆசை.! அக்காவின் கணவரை கத்தியால் குத்திய தங்கையின் காதலன்.!!

11 August 2020, 2:44 pm
Murder Attempt - Updatenews360
Quick Share

வேலூர் : கொளுந்தியாவின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த அக்கா கணவரை சரமாரியாக குத்திய காதலன் உட்பட இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பரதராமி வீ. டி. பாளையம் கிராமத்தை சேர்ந்த குமாரசாமியின் மகள் சாமுண்டீஸ்வரி என்பவருக்கும் திருப்பதியைச் சேர்ந்த துரைபாபுவிற்கும் திருமணம் ஆகி 10 ஆண்டுகள் ஆன நிலையில் குழந்தைகள் இல்லை.

கொரோனா ஊரடங்கால் துரைபாபு தனது மனைவியோடு வீ.டி. பாளையத்தில் உள்ள தனது மாமியார் வீட்டில் மூன்று மாதங்களாக தங்கியுள்ளார். துரைபாபுவிற்கு மனைவியின் தங்கை பார்வதியை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

மனைவி சாமுண்டீஸ்வரியின் தங்கை பார்வதி (வயது 19) அருகே உள்ள பரதராமி கொத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பூவரசன் என்பவருடன் காதல் வயப்பட்டு இருவரும் நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இவர் காதலித்து வந்த பூவரசன் வேறு சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் வீட்டில் உள்ள பெரியோர்களும்,மாமாவும் இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இது சம்பந்தமாக துரைபாபு பூவரசனை பலமுறை எச்சரித்துள்ளார். இந்நிலையில் சாமுண்டீஸ்வரியின் கணவர் துரைபாபு, பார்வதியிடம் உங்கள் இருவரையும் ஒன்றாக சேர விட மாட்டேன் உங்களைக் கொலை செய்துவிடுவேன் என்று கூறியுள்ளார்.

பார்வதி பயந்து தான் காதலித்து வந்த பூவரசனியிடம் இதனை தெரிவித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த பூவரசன் நண்பர்களுடன் சென்று துரைபாபுவை வீ.டி. பாளையத்தில் இருந்து பரதராமி வரும் வழியில் வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் பூவரசன் வைத்திருந்த கத்தியால் துரைபாபுவை வயிற்றை நோக்கி சரமாரியாக குத்தியுள்ளார்.

மயங்கி விழுந்த துரைபாபுவை ஆபத்தான நிலையில் உறவினர்கள் சொந்த ஊரான ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இது சம்பந்தமாக பரதராமி போலீசார் துரைபாபு கொடுத்த புகாரின் அடிப்படையில் பூவரசன் மற்றும் அலெக்ஸ் இருவரையும் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள சூர்யா என்பவரை தேடி வருகின்றனர்.