பாதுகாப்பின்றி கண்ணாடித் துகள்களை ஏற்றிச்சென்ற லாரி: போலீஸிடம் ஒப்படைத்த வேலூர் எம்.பி

Author: kavin kumar
20 August 2021, 4:54 pm
Quick Share

வேலூர்: பாதுகாப்பின்றி கண்ணாடித் துகள்களை ஏற்றிச் சென்ற லாரியை மடக்கிப் பிடித்து காவல்துறையிடம் வேலூர் எம்.பி. கதிர் ஆனந்த் ஒப்படைத்தார்.

வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் இன்று காலை திருமண நிகழ்ச்சி ஒன்றிற்கு காரில் சென்னைக்கு சென்று கொண்டிருந்த போது சத்துவாச்சாரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அவருடைய காருக்கு முன்பு பெரிய டாரஸ் லாரி ஒன்று நொருங்கிய கண்ணாடித் துகள்களை பாதுகாப்பு அற்ற முறையில் ஏற்றிக்கொண்டு வேகமாக சென்றுள்ளது. முன்னால் சென்ற லாரியில் வித்தியாசமான பொருள் ஏதோ சிதறி ரோட்டிலும் லாரிக்கு பின்புறம் வருபவர்கள் மீது விழுவதை கவனித்த எம்.பி கதிர் ஆனந்த், அந்த லாரியை முந்திச் சென்று மடக்கி டிரைவரிடம் விசாரணை செய்தார். அந்த லாரியில் நொறுங்கிப் போன கண்ணாடி துகள்கள் இருபதை கண்ட எம்.பி கதிர் ஆனந்த் “வாகன ஓட்டிகள் பயணிகள் யார் கண்ணிலாவது அல்லது யார் மீதாவது பட்டால் நிச்சயமாக பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை உணராமல் பொருப்பற்ற முறையில் லாரியை வேகமாக ஓட்டிச் செல்கிறிர்களே என லாரி ஓட்டுனரை கடிந்துகொண்டார்.

மேலும் லாரியை ஓரமாக நிறுத்தி வைத்து காவல்துறை அதிகாரிகளை அழைத்து அந்த லாரியை ஒப்படைத்தார். மேலும் அந்த லாரி ஓட்டுநரிடம் உங்கள் நலனுக்காக தானே நீங்கள் வந்து வேலை செய்கிறீர்கள்… உங்கள் குடும்பத்துக்காக தானே உழைக்கிறீர்கள்… அதே போன்று தானே சாலையில் செல்பவர்களும் குடும்பம் இருக்கு அவர்கள் நலனில் அக்கறை செலுத்த வேண்டாமா என்றும் யார் கண்ணிலாவது பட்டு அவர்கள் வாழ்க்கையே கேள்விக் குறியாகும் அபாய சூழ்நிலையயை உங்களால் உணர முடியவில்லையா? இது தவறில்லையா? மனிதாபிமானத்தோடு நடந்து கொள்ளுங்கள் என்று லாரி ஓட்டுநருக்கும் லாரியில் வந்தவர்களுக்கும் அறிவுரை சொல்லிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

Views: - 601

0

0