சீட்டுக்கும் நோட்டுக்கும் மட்டுமே அதிமுகவுடன் பாமக கூட்டணி : வேல்முருகன் சவுக்கடி!!

23 February 2021, 3:48 pm
Velmurugan - Updatenews360
Quick Share

சேலம் : சீட்டுக்கும் நோட்டுக்காகவே பாட்டாளி மக்கள் கட்சி அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளதாக தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவன தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார்.

தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவன தலைவர் வேல்முருகன் சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். பேட்டியில் அவர் கூறும்போது, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வருகின்ற 28ஆம் தேதி ஓமலூரில் தமிழர் வாழ்வுரிமைக்கான மாநாடு நடைபெற உள்ளது என்றும் இந்த மாநாட்டில் தமிழகத்தில் உள்ள வேலைவாய்ப்புகள் தமிழர்களுக்கே என்பதை வலியுறுத்தும் வகையில் இந்த மாநாடு நடைபெறுவதாக தெரிவித்தார்.

தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் ரயில்வே துறை என்எல்சி போன்ற பல்வேறு துறைகளிலும் வடமாநிலத்தவர்கள் ஆதிக்கம் அதிகரித்துள்ளது என்றும் தமிழக அரசின் பல்வேறு துறைகளிலும் தற்போது பல மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்து விட்டதாக தெரிவித்தார்.

இதற்காக தமிழக வாழ்வுரிமைக் கட்சி கடும் போராட்டத்தை கையில் எடுத்துள்ளது இதன் ஒரு பகுதியாக தற்போது மாநில மாநாட்டை நடத்துவதாக தெரிவித்தார். இந்த மாநாட்டில் தமிழகத்தில் வேலைவாய்ப்பு கல்வி உரிமை தமிழர்களுக்கே வழங்க வேண்டும் என வலியுறுத்தி மாநாடு நடைபெறுவதாக தெரிவித்தார்

மத்திய அரசு தமிழர்களை வஞ்சிக்க கூடியவரையில் தமிழக இளைஞர்களை வேலைவாய்ப்பை பறிக்கக்கூடிய வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது இதனை எதிர்க்காமல் விட்டு விட்டால் நாளை தமிழகத்தில் வடமாநிலத்தவர்கள் கையில்தான் தமிழகம் இருக்கும் என்ற நிலை உருவாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

எனவே மத்திய மாநில அரசுகள் தமிழர்களின் வாழ்வாதாரத்தை எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தமிழர்களின் உரிமையை பறிக்க முயல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்

தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த வேல்முருகன், பாட்டாளி மக்கள் கட்சி இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் மூச்சாக வன்னிய சமுதாயத்திற்காக போராடி வருவதாக கூறிக்கொண்ட பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் தற்போது போராட்டத்தை கைவிட்டு மௌனம் சாதிப்பது ஏன் என்றும் சீட்டுக்காகவும் நோட்டுக்காகவும் மட்டுமே இருவரும் கொள்கையை விட்டுக் கொடுப்பதாகவும் ஒட்டுமொத்த வன்னிய மக்களையும் இது ஏமாற்றும் செயல் என்றும் தெரிவித்தார்.

தற்போது பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் ராமதாஸ் இடம் உள்ள ஆயிரக்கணக்கான கோடி மதிப்பிலான வன்னிய சொத்துக்கள் தற்போது வன்னிய அறக்கட்டளைக்கு மாற வாய்ப்புகள் உள்ளது என்பதை அறிந்து கொண்ட ராமதாஸ் தற்போது இட ஒதுக்கீடு போராட்டத்தை கையிலெடுத்து வன்னிய மக்களை திசைதிருப்பி வன்னிய சமுதாய மக்கள் சொத்துக்களை தன்னுடைய பெயருக்கு மாற்ற திட்டமிட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்

எனவே தற்போது கூட்டணி அமைத்துள்ள அதிமுக ஒட்டு மொத்த 2 கோடி வன்னியர்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதத்தில் பாட்டாளி மக்கள் கட்சி செயல்படுவதாகவும் எந்த காரணத்தைக் கொண்டும் கூட்டணியில் பாமக இடம்பெற்றுள்ளது என்ற அடிப்படையில் இட ஒதுக்கீட்டை வழங்கக் கூடாது என்றும் அவ்வாறு வழங்க நிர்பந்தம் ஏற்பட்டால் ஒட்டுமொத்த வன்னிய சமுதாய மக்கள் பிரதிநிதிகளும் அழைத்து அவர்கள் முன்னிலையில் இட ஒதுக்கீட்டை அறிவிக்க வேண்டுமென்றும் தமிழக முதல்வரை கேட்டுக் கொண்டார்.

Views: - 1

0

0