திமுக ஆட்சியில் உயரதிகாரிகளுக்கு தொடர் மிரட்டல்.. வெங்கடாச்சலம் சாவில் மர்மம் : முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம்!!

Author: Udayachandran RadhaKrishnan
3 December 2021, 6:00 pm
CV shanmugam -Updatenews360
Quick Share

விழுப்புரம் : திமுக ஆட்சியில் உயரதிகாரிகள் மிரட்டப்படுகிறார்கள் என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றம்சாட்டியுள்ளார்.

விழுப்புரத்தில் உள்ள அதிமுக மாவட்ட கட்சி அலுவலகத்தில் மாவட்ட கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்குப் பின், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.

அப்போது, அவர் கூறியதாவது: அரசு ஊழியர்கள் ஆதரவில்லாமல் திமுக ஆட்சிக்கு வந்திருக்க முடியாது. அரசு ஊழியர்களின் ஆதரவால்தான் திமுக இன்றைக்கு ஆட்சியில் இருந்து வருகிறது. ஆனால், இன்றைக்கு நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. அரசு ஊழியர்கள் மற்றும் உயரதிகாரிகள் லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.

இதற்குப் பின்புலமாக அரசு மறைமுகமாக செயல்பட்டு வருகிறது. ஆட்சிக்கு வந்த 6 மாத காலத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்குப் பதிலாக, அதைவிட்டு விட்டு பழிவாங்கும் நோக்கத்துடன், எதிர்க்கட்சியினரை விமர்சிக்கும் போக்கு தொடர்கிறது.

மேலும், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அரசு உயரதிகாரிகள் வீடுகளில் அதிரடி சோதனை நடத்த, லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது. இதன் காரணமாகத்தான் அதிகாரிகள் தற்கொலை செய்து கொள்ளும் அவல நிலை தொடர்கிறது. உயரதிகாரியாக இருந்த வெங்கடாச்சலம் சாவில் மர்மம் இருப்பதாகவும் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என சி.வி. சண்முகம் கூறினார்.

Views: - 106

0

0