திறமையிருந்தும் கண்டுகொள்ளாத தமிழ் சினிமா : வெண்ணிலா கபடி குழு படத்தின் பிரபலம் திடீர் மரணம்!!

Author: Udayachandran RadhaKrishnan
17 September 2021, 11:12 am
Vennila Kabadi Kulu- Updatenews360
Quick Share

பிரபல கவிஞரும் பாடலாசிரியருமான பிரான்சிஸ் கிருபா பிரான்சிஸ் மரணமடைந்ததையடுத்து திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே பதினிப்பாறை என்ற கிராமத்தை சேர்ந்த பிரான்சிஸ் கிருபா மல்லிகை கிழமைகள், சம்மனசுக் காடு, ஏழுவால் நட்சத்திரம், நிழலின்றி ஏதுமற்றவன் போன் படைப்புகளை எழுதியுள்ளார்.

எழுத்தாளராக மட்டுமல்லாமல் திரைப்படங்களுக்கும் பாடல்களை எழுதியுள்ளார். வெண்ணிலா கபடி குழு, அழகர்சாமியின் குதிரை, ராட்டினம், குரங்கு பொம்மை உள்ளிட்ட படங்களுக்கு பாடலை எழுதியுள்ளார்.

காமராஜரின் வாழ்க்கை வரலாற்று படத்துக்கு திரைக்கதை மற்றும் வசனம் எழுதிய இவர் தன்னுடைய படைப்புகளுக்காக பல்வேறு விருதுகளையும் வெற்றுள்ளார். 2008ஆம் ஆண்டு நெய்தல் இலக்கிய அமைப்பினர் சுந்தர ராமசாமி விருது, சம்மனசுக்காடு கவிதை தொகுப்புக்காக சுஜாதா விருதும் பெற்றுள்ளார்.

Francis Kiruba | காலமானார் பிரபல எழுத்தாளர் ஃபிரான்சிஸ் கிருபா..!

2019ஆம் ஆண்டில் சென்னை கோயம்பேட்டில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த இளைஞரை காப்பாற்ற பிரான்சிஸ் கிருபா முயற்சித்தார். ஆனால் அந்த இளைஞர் உயிரிழக்கவே, பிரான்சிஸ்தான் கொலையாளி என கருதி போலீசார் அவரை கைது செய்தனர்,

அப்போது நீண்ட தலைமுடி மற்றும் தாடியுடன் பிரான்சிஸ் இருந்ததால் சந்தேகத்தில் போலீசார் கைது செய்தனர். ஆனால் பிரேத பரிசோதனையில் இளைஞர் வலிப்பால் இறந்தது தெரியவந்தது.

உடல்நலக்குறைவால் நேற்று இரவு காலமான பிரான்சிஸ், வறுமையின் கோரப்பிடியில் இருந்ததாக கூறப்படுகிறது. அவரது உடல் சொந்த ஊரான நெல்லைக்கு கொண்டு சென்ற அடக்கம் செய்யப்பட உள்ளது.

Views: - 529

0

0