நடிகர் விஷ்ணு விஷாலுடன் இணைந்து வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில் நடித்த நடிகர் ஹரி வைரவன் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.
மதுரை அருகே அழகர்கோவில் சாலையில் அமைந்துள்ள கடச்சனேந்தல் கிராமத்தில் வசித்து வருபவர் நடிகர் ஹரி வைரவன். வெண்ணிலா கபடி குழு, குள்ளநரி கூட்டம், நான் மகான் அல்ல உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்தவர் நடிகர் ஹரி வைரவன். இவர் சிறுநீரகக் கோளாறு காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை மதுரை கடச்சனேந்தலில் உள்ள அவரது வீட்டில் உயிரிழந்தார்.
மருத்துவ சிகிச்சை மேற்கொண்டபோது அவருக்கு, நடிகர் விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால், நடிகர் சூரி உள்ளிட்ட திரைத்துறையைச் சார்ந்த பலர் உதவி செய்தனர்.
உடல் நிலை மீண்டு வந்த நிலையில், நடிகர் ஹரி வைரவன் உயிரிழந்தது, திரைத்துறையினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இவருக்கு மனைவி மற்றும் ஒரு பெண் குழந்தை ஆகியோர் உள்ளனர்.
மதுரை அழகர்கோவில் சாலையில் அமைந்துள்ள கடச்சனேந்தல் கிராமத்தில் இன்று மாலை 4.30 மணியளவில் இறுதிச்சடங்குகள் நடைபெறும் என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.