காமெடி நடிகர் சின்னி ஜெயந்த் மகன் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி..! அகில இந்திய அளவில் 75’வது இடம்..!
5 August 2020, 7:28 pmதமிழ் சினிமாவின் மூத்த நகைச்சுவை நடிகர் சின்னி ஜெயந்த், எண்பதுகள் மற்றும் தொண்ணூறுகளில் சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சத்தியராஜ், பிரபு, கார்த்திக், விஜய் மற்றும் அஜித் உள்ளிட்ட அனைத்து சிறந்த நட்சத்திரங்களுடன் மறக்கமுடியாத பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
ஸ்ருஜன் ஜெய் தனது குழந்தை பருவத்திலிருந்தே ஐ.ஏ.எஸ் அதிகாரியாக வேண்டும் என்பது அவரது கனவு என்றும் அவரது பெற்றோர் அவரது ஆர்வத்தை பின்பற்ற ஊக்குவித்ததாகவும் ஊடகங்களுடன் பகிர்ந்துள்ளார். சின்னி ஜெயந்த் ஒரு பிரபலமான நடிகராக இருந்தாலும், அவர் ஒருபோதும் தனது குழந்தைகளை திரைத்துறையில் நுழைய கட்டாயப்படுத்தவில்லை.
நிர்வாக சேவைகளில் ஈடுபடும்போது கல்வி, வர்த்தகம் மற்றும் பெண்கள் அதிகாரம் ஆகியவற்றில் தான் கவனம் செலுத்துவதாகவும், தனது பெற்றோருக்கு பெருமை சேர்ப்பதாக உறுதியளித்ததாகவும் ஸ்ருஜன் மேலும் கூறினார்.
இது தொடர்பாக பேசிய சின்னி ஜெயந்த், “முதன் முறையாக தேர்வில் தோற்றிந்தாலும், இரண்டாவது முறை வெற்றி பெற்றுள்ளது மகிழ்ச்சியை தருகிறது. இது எங்கள் குடும்பத்திற்கே பெருமையான தருணம்.” எனக் கூறியுள்ளார்.
சின்னி ஜெயந்த் மகன் இந்திய ஆட்சிப்பணிக்கு தேர்வாகியுள்ளதற்கு திரைத்துறை வட்டாரங்கள் மற்றும் மக்களிடம் இருந்து பாராட்டுக்களை பெற்று வருகிறார்.
0
0