17 ஆண்டுகள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி : டாஸ்மாக் இடமாற்றம்.. சமூக சேவகியை கொண்டாடிய மக்கள்!!

Author: Udayachandran RadhaKrishnan
25 September 2021, 3:35 pm
Tasmac Place Change -Updatenews360
Quick Share

திருப்பூர் : தாராபுரத்தில் 17 ஆண்டுக்கு பிறகு டாஸ்மாக வேறு இடத்திற்கு மாற்றப்பட்டதால் போராடி வென்ற சமூக சேவகிக்கு வாழ்த்து தெரிவித்து பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி மக்கள் கொண்டாடினர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பேருந்து நிலையம் அருகே கடந்த 18 வருடங்களாக செயல்பட்டு வந்த மதுபான கடையால் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு இடையூறாக இருந்தது. மேலும் இந்த கடையை மக்கள் கடந்த 17 வருடங்களாக போராடி அகற்ற முடியாத நிலையில் இருந்து வந்தது.

இந்த நிலையில் சமூக சேவகி செல்வராணி கடந்த ஒரு வருட காலமாக தனி ஒரு பெண்மணியாய் மதுக்கடைக்கு எதிராக பலகட்ட போராட்டக்காரர்கள் நடத்தி. 17 வருடங்களாக பெண்களை அச்சுறுத்தி வந்த அரசு மதுபான கடையை வேறு பகுதிக்கு மாற்றியது ‌.

எனவே மூடுவிழா இப்பகுதி சமூக சேவகிசெல்வராணி மக்களுடன் அப்பகுதி மக்களுக்கு இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து மதுக்கடை மூடப்பட்டது கொண்டாடி வருகின்றனர். மேலும் அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் மற்றும் சார் ஆட்சியர் காவல்துறை ஆகியோருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

Views: - 415

0

0