ஆடையின்றி தோன்றி மாணவிகளுக்கு வீடியோ கால் : கல்லூரி சேர்மேனை கைது செய்ய மாணவிகள் போராட்டம்… ஸ்தம்பித்த போக்குவரத்து!!

Author: Udayachandran RadhaKrishnan
11 June 2022, 6:41 pm
Nursing College Abused -Updatenews360
Quick Share

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தெற்குத்தெருவில் தனியார் கேட்டரிங் மற்றும் நர்சிங் கல்லூரி உள்ளது. இந்தக் கல்லூரியில் 300க்கும் மேற்ப்பட்ட மாணவ மாணவிகள் கேட்டரிங் நர்சிங் படித்து வருகின்றனர். இந்த கல்லூரியின் சேர்மனாக தாஸ்வின் ஜான் கிரேஸ் என்பவர் உள்ளார்.

கடந்த 6 மாதத்திற்கு முன், இதே கல்லூரி மாணவியிடம் வீடியோ காலில் நிர்வாணமாக பேசி ஆபாசமாக நடந்து கொண்ட வீடியோ ஒன்ற தற்போது அந்த கல்லூரி மாணவிகளிடையே பரவியதால் பரபரப்பு ஏற்ப்பட்டது.

இந்த நிலையில் மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்ட கல்லூரி சேர்மேனை கைது செய்ய வேண்டும் எனக் கூறி காலை முதல் கல்லூரி முன்பு மாணவ மாணவிகள் வகுப்புக்கு செல்ல மறுத்து முற்றுகையிட்டனர். இதை தொடர்ந்து விசாரணைக்கு சேர்மேன் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இருப்பினும் கல்லுரி சேர்மன் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்து அவரை போராட்டம் நடக்கும் இடத்துக்கு அழைத்து வரவேண்டும் என கூறி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களுடன் காவல்துறை அதிகாரி, வருவாய் துறை அதிகாரிகள் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். 2 மணி நேரம் முற்றுகை போராட்டம் நடைபெற்ற நிலையில் காவல்துறையினர் சேர்மனை அழைத்து வராத காரணத்தால் மாணவர்கள் விருதுநகர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கல்லுரி சேர்மனை கைது செய்து வழக்கு பதிவு செய்து கல்லுரிக்கு அழைத்து வர வேண்டும் தங்கள் படிப்பு தொடர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்து சுமார் 1 மணி நேரம் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

இதை அடுத்து வட்டாட்சியர் அறிவழகன் சாலை மறியலில் ஈடுபட்ட மாணவ-மாணவிகளின் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இன்று மாலைக்குள் சேர்மேன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை அடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட மாணவ மாணவிகள் கலைந்து சென்றனர்.

தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என கூறி போலீசாரிடம் மாணவிகள் வாக்குவாதம் செய்தனர். இதனையடுத்து தனியார் கல்லூரி சேர்மன் தாஸ்வின் ஜான் கிரேஸ் நகர் காவல்நிலைய போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட கல்லூரி சேர்மன் தாஸ்வின் ஜான் கிரேஸ் பாஜக முன்னாள் சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 607

0

0