கல்யாணத்துக்கு தேதி குறித்த நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடி..? விரைவில் அறிவிப்பு.. !

Author: Rajesh
23 April 2022, 7:45 pm
Quick Share

திரைப்பிரபலங்கள் ஜோடியாக சுற்றுவதும் பின்ன ஓரிரு மாதங்கள் அல்லது வருடங்கள் ஒன்றாக இணைந்து வாழ்ந்த பின்னர், சிலர் சரிவராது என பிரிந்து விடுகின்றனர். அதிலும், சிலர் திருமணம் செய்துகொண்டு ஒன்று அல்லது இரண்டு வருடங்களில் தங்களது மண வாழ்க்கையை முடித்துக் கொண்ட பிரபலங்களும் இருக்கின்றனர்.

அப்படி இருப்பவர்கள் மத்தியில், நீண்ட வருடங்களாக தங்களை காதலர்களாக அறிவித்து கொண்டு, காதல் பறவைகளாக தமிழ் திரையுலகில் உலா வருகின்றனர் இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா.
இவர்கள் ‘நானும் ரவுடி தான்’ எனும் திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி நயன்தாரா நடிக்கும் போதிலிருந்தே இருவரும் காதலித்து வந்துள்ளனர். பல வருடங்களாக காதலித்து வந்த ஜோடி சில மாதங்களுக்கு முன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். அதன் பிறகு, இவர்கள் திருமணம் எப்போது நடக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் தற்போது அதற்கான தகவல் வெளிவந்துள்ளது.

ஆம், வருகிற ஜூன் மாதம் இவர்களின் திருமணம் இருக்கும் என கூறப்படுகிறது. இவர்களின் நிச்சயதார்த்தம் போல் எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல், அவர்கள் குடும்பம் மட்டும் கலந்துகொண்டு நடந்து முடிந்தது. அதேபோல, திருமணத்தையும் முடிக்க இவர்கள் திட்டமிட்டு இருக்கிறார்களாம். அதனால் தான் அது பற்றிய தகவல்கள் வெளிவரவில்லை.

Views: - 707

6

5