விஜய் மக்கள் இயக்கத்திற்கு புதிய நிர்வாகிகள் நியமனம்: தந்தைக்கு தொடர் தடை போடும் விஜய்!

11 November 2020, 11:05 pm
Quick Share

சென்னை: விஜய் மக்கள் இயக்கத்திற்கு புதிதாக மாவட்டத் தலைவர்கள், இளைஞர் அணி தலைவர்களை சென்னை, காஞ்சிபுரம், கோவை, திருச்சி, மதுரை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் தேர்தல் நெருங்கும் நிலையில் பல்வேறு மாற்றங்கள் அரசியல் கட்சிகளுக்குள் நடைபெற்ற வருகிறது. சில நடிகர், நடிகைகள் பிரபலங்கள் கட்சியில் இணைவதும், கட்சிகளை மாற்றுவது நடந்து வருகிறது. இதனிடை விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் கடந்த வாரம் கட்சியின் பெயரை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ததார். இதையடுத்து நடிகர் விஜய் தனக்கும் தனது தந்தை தொடங்கிய கட்சிக்கும் தொடர்பு இல்லை என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மேலும் அந்த அறிக்கையில் என் தந்தை அரசியல் கட்சியை தொடங்கினார் என்பதை ஊடகங்கள் வாயிலாக அறிந்துகொண்டேன். தந்தை ஆரம்பித்துள்ள கட்சியில் ரசிகர்கள் யாரும் இணைய வேண்டாம். அந்தக் கட்சிக்கும் எனக்கும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ எந்தத் தொடர்பும் இல்லை” எனக் கூறி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார். தந்தையின் அரசியல் மூவை தடுத்து நிறுத்தவே இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதேநேரம் தந்தையும், மகனும் பல ஆண்டுகளாக பேசுவதே இல்லை என்று அடுத்த அதிர்ச்சியை கொடுத்தார் விஜய்யின் அம்மா.

அடுத்து அரசியல் நெருக்கடிகளை சந்தித்ததை அடுத்து விஜய் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை மாவட்ட வாரியாக சந்தித்து பேசினார். இந்நிலையில் தற்போது தனது மக்கள் இயக்கத்திற்கு மாவட்ட தலைவர்கள், இளைஞரணி தலைவர்களை நியமித்து அதிரடி காட்டியிருக்கிறார் விஜய். சென்னை, கோவை, திருச்சி, மதுரை, காஞ்சிபுரம், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் புகைப்படம், இயக்கத்தின் பெயர், கொடி உள்ளிட்ட அனைத்து பயன்பாடுகளுக்கும் அனுமதி பெறவேண்டும் என்றும் மீறுவோர் மீது இயக்கத்தின் சார்பில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். தந்தையின் செயல்பாடுகளை கட்டுப்படுத்த இப்போதே விஜய்யே நேரடியாக களத்தில் இரங்கி அதிரடி காட்டியுள்ளார்.

Views: - 15

0

0