களத்தில் இறங்கினார் விஜய்…சூடு பிடிக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் : சர்கார் அமைக்க காத்திருக்கும் ரசிகர்கள்!!
Author: Udayachandran RadhaKrishnan27 January 2022, 1:42 pm
ஊரக உள்ளாட்சி தேர்தலை தொடர்ந்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் விஜய் மக்கள் இயக்கம் போட்டியிடுகிறது.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையர் அறிவித்தார். நகர்ப்புற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்தது.
இந்த நிலையில், அனைத்து கட்சிகளும் ஊரக உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறது. இதற்கிடையில், ஊரக உள்ளாட்சி தேர்தலை தொடர்ந்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் விஜய் மக்கள் இயக்கம் போட்டியிடுகிறது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் போட்டியிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது என விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.
இந்த தேர்தலில் விஜய் படம், மக்கள் இயக்க கொடியை பயன்படுத்திக்கொள்ள அனுமதி எனவும் வேட்பாளர்களை மாவட்ட பொறுப்பாளர்கள் இறுதி செய்வார்கள் என தெரிவித்தார்.
கடந்த ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் 129 பேர் வெற்றி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் மக்கள் இயக்கம் போட்டியிட உள்ளதால் தேர்தலில் எதிர்பாரா திருப்புமுனை அமையும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே உள்ளாட்சி தேர்தலில் பெரும்பாரியான வெற்றியை பெற்ற விஜய் மக்கள் இயக்கம், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கால் பதிக்க உள்ளதால் கணிசமான வெற்றியை பெரும் என ஒருபக்கம் ரசிகர்கள் ஆர்பரிக்கின்றனர். என்ன நடக்கும் என்பது பிப்ரவரி 22ஆம் தேதி தெரியும்.
3
2