தமிழகத்தில் தனது முதல் பிரச்சாரத்தை தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் இன்று திருச்சியில் துவக்கினார்.
சென்னையில் இருந்து விமான மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு 9.40மணி அளவில் வந்தடைந்தார். காலை சுமார் பத்து மணி அளவில் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட அவர் மக்கள் வெள்ளத்தில் நீந்தி சுமார் 11மணி அளவில் பிரச்சாரம் நடக்கும் இடத்திற்கு வர வேண்டிய அவர் 5மணி நேரம் கடந்து வந்து சேர்ந்தார்.
ஏழு கிலோமீட்டர் தூரத்தை சுமார் 5 மணி நேரம் கடந்து பிரச்சாரம் மேற்கோள் இடத்திற்கு வந்தடைந்தார்.
தொடர்ந்து அவர் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பேசுகையில் , நான் பேசுவது கேட்கிறதா? போருக்கு போவதற்கு முன்பாக கோவிலுக்கு சென்று சாமி கொண்டு வந்துதான் போவோம். அதுபோல அடுத்த வருடம் ஜனநாயகப் போர் நடக்க உள்ளது.
ஒரு சில மண்ண தொட்டா நல்லது, சில நல்ல காரியங்கள் இந்த இடங்களில் நடத்தினால் நல்லது என்று பெரியவர்கள் கூறுவார்கள். திருச்சியில் தொடங்கினால் திருப்புமுனையாக அமையும் என்று சொல்வார்கள் அதற்கு நிறைய உதாரணம் உண்டு. அறிஞர் அண்ணா அவர்கள் முதல் முதலாக தேர்தல் திருச்சி தான்.
அதன் பிறகு எம்ஜிஆர் அவர்கள் அவருடைய முதல் மாநில மாநாட்டை நடத்தியது திருச்சியில் தான். பெரியார் வாழ்ந்த இடம் மலைக்கோட்டை இருக்கும் இடம் மதச்சார்பைக்கு எடுத்துக்காட்டாகும் மண்ணாகும்
திருச்சியில் திருப்புமுனை ஏற்படும் என்று பேச துவங்கிய விஜயன் ஆடியோ திடீரென்று வேலை செய்யவில்லை. தனக்கு மட்டுமே பேசிக் கொண்டிருந்த விஜய் கட்சியினர் அனைவரும் ஏதும் கேட்கவில்லை என்று சொன்ன பொழுதும் அவர் எதனையும் சட்டை செய்யவில்லை.
தொடர்ந்து அவர் மைக்கை பிடித்து, பேப்பரை பிடித்து கொண்டு சிறு பிள்ளை போல பேசி கொண்டே போனார்.
முதல் கோணல் முற்றிலும் கோனல் என்பது போன்று விஜய்க்கு அமைந்தது என கட்சியினர் கூறியதுடன் சுமார் 5 மணி நேரம் நின்று இருந்தது தான் தலை எழுத்து என புலம்பி சென்றனர்.
சிறிது நேரம் அவர் பேசியதில் நீட் ரத்து செய்யப்படும் என்று சொன்னீர்களே செய்தீர்களா, கல்வி கடனை ரத்து செய்வேன் செய்திர்களோ, 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தப்படும் என்று சொன்னீர்களே செய்தீர்களா, இரண்டு லட்சம் வீடுகளுக்கு கட்டி கொடுக்கப்படும் சொன்னீர்களே கட்டிக் கொடுத்தீர்களா என்பது மட்டுமே கேட்டது.
தொடர்ந்து கட்சியினர் ஏதும் கேட்கவில்லை என்று சொன்ன போதும், பரிட்சையில் மாணவர்கள் இரண்டு பேப்பர் மூன்று பேப்பர் வாங்கி எழுதுவது போல தன் கையில் வைத்திருந்த பேப்பரை திருப்பி திருப்பி எவனுக்கு கேட்டால் என்ன கேட்க விட்டால் என்ன என்ற நோக்கில் படித்துக் கொண்டே சென்றார்.
தொண்டர்கள்பேசுவது கேட்கவில்லை என கையை காட்டி சென்னதை, உற்சாகமாக தொண்டர்கள் கையை அசைத்து மகிழ்கிறார் என்று நினைத்து அவரும் கையை மட்டுமே ஆட்டிவிட்டு தன் பேச்சை முடித்து விட்டார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.