உணர்வுகளை புரிந்து கொண்டு செயல்பட்டால் விஜய் சேதுபதிக்கு நல்லது : அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ

By: Udayachandran
16 October 2020, 2:19 pm
Kadamboor Raju - Updatenews360
Quick Share

தூத்துக்குடி : உணர்வுகளை புரிந்து கொண்டு நடிகர் விஜய் சேதுபதி செயல்பட்டால் அவருடை எதிர்காலத்திற்கு நல்லது என தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ ராஜூ கூறியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரகே உள்ள கழுகாசலபுரத்திற்கு ரூ.25 லட்சம் மதீப்பிட்டில் தடுப்பு அணை பணிகள் தொடக்க விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்தார்.

கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிகர் விஜய் சேதுபதி யோசித்து பார்க்க வேண்டும், ஒட்டுமொத்த உணர்வாளர்களின் உணர்வுகளை மதிக்க வேண்டிய இடத்தில் நடிகர் விஜய் சேதுபதி உள்ளார்.

திரைப்படத்தில் நடிப்பது தனிப்பட்ட உரிமை என்றாலும் உணர்வுகளை புரிந்து கொள்வர் என்று நினைக்கிறேன்.
புரிந்து கொள்ள வேண்டும். புரிந்து கொண்டு செயல்பட்டால் அவருடைய எதிர்காலத்திற்கு நல்லது என்று கூறினார்.

மேலும், கேளிக்கை வரி குறைப்பு, சினிமா டிக்கெட் கட்டணம் வரைமுறைபடுத்தப்பட்டுள்ளது. பாராமரிப்பு கட்டணம் உயர்வு என திரைத்துரையினருக்கு தமிழக அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி உள்ளது. திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் சங்க நிர்வாகிகளுடன் திரையரங்கு திறப்பு மற்றும் வழிமுறைகளை பின்பற்றுவது குறித்து ஆலோசனை நடைபெற்றது. திரையரங்குகள் திறப்பு பற்றி ஒருவாரத்தில் நல்ல முடிவு வரும் என்றார்.

Views: - 42

0

0