மருத்துவர்களின் ஊதிய உயர்வு கோரிக்கையை நிறைவேற்றுங்க : தமிழக அரசுக்கு விஜயகாந்த் வலியுறுத்தல்

Author: Babu Lakshmanan
1 July 2021, 7:25 pm
Vijayakanth - Updatenews360
Quick Share

சென்னை : மருத்துவர்களின் ஊதிய உயர்வு கோரிக்கையை புதிதாக அமைந்துள்ள தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

தேசிய மருத்துவ தினத்தையொட்டி தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது :- கோடிக்கணக்கான உயிர்களை காப்பாற்றி வரும் மருத்துவர்களுக்கு தேசிய மருத்துவர்கள் தின வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஊதிய உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி பல ஆண்டுகளாக மருத்துவர்கள் போராடி வருகிறார்கள். அவர்களது கோரிக்கையை இதற்கு முந்தைய தமிழக அரசு நிறைவேற்றவில்லை. எனவே தற்போதுள்ள புதிய அரசாவது மருத்துவர்களின் ஊதிய உயர்வு கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும், என தெரிவித்துள்ளார்.

Views: - 395

0

0