விஜய்-க்கு வந்த வாய்ப்பை தட்டி பறித்த விக்ரம்.. ஓப்பனாக சொன்ன பிரபல இயக்குநர்..!

Author: Rajesh
15 May 2022, 2:56 pm
Quick Share

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விக்ரம். டப்பிங் கலைஞராக தனது பயணத்தை துவங்கிய இவர், தன்னுடைய கடின உழைப்பால் குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகரில் ஒருவராக உருவெடுத்துள்ளார்.

சேது படத்தின் தனது அசாதாரன திறமையை வெளிப்படுத்திய விக்ரம், அடுத்தடுத்து பட வாய்ப்புகள் தேடி வர தொடர்ந்து தில், தூள், சாமி, அந்நியன், தெய்வத் திருமகள், ஐ போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்க இடம் பிடித்துள்ளார்.

கடைசியாக இவரது நடிப்பில், மகான் திரைப்படம் வெளியானது. OTT யில் ரிலீஸ் செய்யப்பட்ட இந்த படத்தில், இவருடன் மகன் துருவும் நடித்திருந்தார்.இதையடுத்து, இவரது நடிப்பில் கோப்ரா திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இதையடுத்து, இவரது கைவசம் பொன்னியின் செல்வன் படம் உள்ளது.

இந்நிலையில், கடந்தாண்டு விக்ரம் மற்றும் இயக்குனர் ரஞ்சித் சியான் 61′ படத்தில் இணையவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். இந்த படத்தை, ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார்.

சமீபத்தில் இது குறித்து பேட்டி ஒன்றில், இயக்குநர் பா.ரஞ்சித் கூறும்போது ” விஜய்க்காக நான் ஹாலிவுட் ஸ்டைலில் ஒரு கதை வைத்திருதேன். இந்த கதை பற்றி விக்ரமிடம் சொன்னபோது, அவருக்கு மிகவும் பிடித்துவிட்டதாகவும், அவரே இந்த படத்தில் நடிப்பதாகவும் சொன்னார். அந்த படம் தற்போது ஒப்பந்தமாகியுள்ள ‘சியான் 61’ திரைப்படம். இந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் துவங்கும் என்று தெரிவித்துள்ளார்.

Views: - 822

9

1