சீயானை காண வந்த ரசிகர்களை லத்தியால் அடித்து விரட்டிய மத்திய பாதுகாப்பு படை : திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
23 August 2022, 9:48 am
Vikram Fans Injured -Updatenews360
Quick Share

நடிகர் விக்ரம், நடிகை ஸ்ரீநிதி செட்டி மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் நடிப்பில் வரும் 25-ஆம் தேதி வெளியாக உள்ளது கோப்ரா திரைப்படம். இந்த படத்தின் ப்ரோமோஷன் ஜோசப் கல்லூரியில் இன்று நடைபெற உள்ளது. இதற்காக இன்று காலை சென்னையிலிருந்து விமான மூலம் திருச்சி வந்தார்.

இவர்களை வரவேற்க ரசிகர்கள் விமான நிலையத்தில் கூடியிருந்தனர். விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த விக்ரமைப் பார்த்த ரசிகர்கள் அவரை சூழ்ந்து கொண்டு ஆரவாரத்தில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக காவல்துறையினருக்கும் ரசிகர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது அங்கிருந்த மத்திய பாதுகாப்பு படையினர் அவர்களை லத்தியால் அடித்து துரத்தினர். இதனால் விமான நிலையத்தில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Views: - 384

0

0