ஆயிரம் பூக்கள் மலரட்டும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் தான் ராமதாஸ். சிறந்த திரைக்கதை எழுத்தாளராக விளங்கிய இவர், வசூல் ராஜா எம்பிபிஎஸ், காக்கிச் சட்டை, விசாரணை உள்ளிட்ட படங்களில் நடித்து அசத்தினார். குறிப்பாக, போலீஸ் கதாபாத்திரம் பொருத்தமாக இருந்ததால், பல படங்களில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.
சினிமாவில் கால்பதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சென்னைக்கு வந்த இவரது சொந்த ஊர் விழுப்புரம் ஆகும். நகைச்சுவை நடிகர் மனோ பாலாவிடம் திரைக்கதை ஆசிரியராகவும், இயக்குநரும், நடிகருமான மணிவண்ணனிடம் உதவி இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.
1986ம் ஆயிரம் பூக்கள் மலரட்டும் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான இவர், ராஜா ராஜாதான், நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு, இராவணன், வாழ்க ஜனநாயகம், சுயம்வரம் என பல படங்களை இயக்கியுள்ளார். அதேபோல் திரைக்கதை ஆசிரியராக பல படங்களில் வேலை பார்த்துள்ளார் ராமதாஸ்.
அதோடு, வசூல் ராஜா MBBS, யுத்தம் செய், விசாரணை, தர்மதுரை, காக்கி சட்டை, மெட்ரோ, விசாரணை, அறம், விக்ரம் வேதா, மாரி 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்து குணசித்திர நடிகராகவும் தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை பிடித்தவர் ராமதாஸ்.
இந்த நிலையில், நேற்று இரவு நடிகர் ராமதாஸ் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்து விட்டதாக அவர்கள் குடுமபத்தினர் தெரிவித்துள்ளனர். இது திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்களுக்கு அதிர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கேகே நகரில் உள்ள அவரது இல்லத்தில் இன்று இறுதிச்சடங்கு நடைபெறும் என்று அவரது மகன் கலைச்செல்வன் தெரிவித்துள்ளார்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.