சேலத்தில் அடங்கல் சான்றிதழ் வழங்க லஞ்சம் கேட்ட கிராம நிர்வாக அலுவலர் : வழக்கறிஞர் புகார்!!

5 February 2021, 3:16 pm
Farmer Bribery Complaint - Updatenews360
Quick Share

சேலம் : விவசாய நிலத்திற்கு அடங்கல் சான்றிதழ் வழங்க கிராம நிர்வாக அலுவலர் லஞ்சம் கேட்பதாக விவசாயி பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

சேலம் மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள ஆச்சாங்குட்டப்பட்டி சேர்ந்தவர் சிவப்பிரகாசம். விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த இவர் சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார்.

ஆச்சாங்குட்டப்பட்டியில் உள்ள தனக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் நிலத் திற்கான அடங்கல் சான்றிதழ் பெறுவதற்காக கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் செல்வம் என்பவரை அணுகி உள்ளார்.

விண்ணப்பத்தை சமர்ப்பித்த விவசாயியும், வழக்கறிஞருமான சிவப்பிரகாசம் சில தினங்களுக்கு பிறகு மீண்டும் கிராம நிர்வாக அதிகாரியை சந்தித்து உள்ளார். சான்றிதழ் தொடர்பாக இதற்கு சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் தங்களின் நிலம் சம்பந்தமாக வருவாய் வட்டாட்சியரிடம் வேறு விதமான கடிதம் வந்து இருப்பதால் அதனை விசாரித்த பிறகு தான் தங்களுக்கு அடங்கல் சான்றிதழ் வழங்க வேண்டும் என்றும் கூறியதோடு இது சம்பந்தமாக அவரை கடந்த இரண்டு மாதங்களாக சென்று சந்தித்து மனு அளித்துள்ளார்.

இதன் காரணமாக மன வேதனை அடைந்த அவர் சேலம் வருவாய் கோட்டாட்சியரிடம் புகார் அளித்தும் எந்த விதமான பலனும் அவருக்கு கிடைக்கவில்லை. ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த விவசாயியும் வழக்கறிஞருமான சிவப்பிரகாசம் தாங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள் அதனை நான் செய்து விடுகிறேன் என்று கூறியும் காலம் தாழ்த்தி உள்ளனர்.

அரசுத்துறை அதிகாரிகள் அனைவரும். இந்த காலகட்டத்தில் சேலம் மாவட்ட ஆட்சியர் ராமனின் நேர்முக உதவியாளர் சந்தித்து தனது மன வேதனையை புகார் மூலம் தெரிவித்தார் வழக்கறிஞர் சிவப்பிரகாசம். அதில் எனது சொந்த நிலத்திற்கு அடங்கல் சான்றிதழ் வழங்க கிராம நிர்வாக அலுவலர் அதிகப்படியான லஞ்சம் எதிர்பார்ப்பதாகவும் ஒரு வழக்கறிஞராக இருக்கும் தன்னிடமே லஞ்சம் கேட்கும் கிராம நிர்வாக அலுவலர் சாதாரண ஏழை எளிய மக்களிடம் என்னவெல்லாம் செய்து கொண்டிருப்பார் என்பதை புரிந்து கொள்ளுங்கள் என்றும் தனக்கு சான்றிதழ் வழங்குவதோடு மட்டுமல்லாமல் தன்னை கடந்த இரண்டு மாத காலமாக அலைக்கழித்த கிராம நிர்வாக அலுவலர் பணியிடம் மாற்றம் செய்வதோடு அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஏற்கனவே அரசுத்துறை அதிகாரிகள் அதுவும் குறிப்பாக சேலம் மாவட்டத்தில் உள்ள அரசுத் துறை அதிகாரிகள் இலஞ்சம் மற்றும் ஊழல் களில் இழைத்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் தனது சொந்த நிலத்திற்கு அடங்கல் சான்றிதழ் பெறுவதற்காக கிராம நிர்வாக அலுவலர் உட்பட சில அதிகாரிகள் தன்னிடம் அதிகப்படியான லஞ்சம் எதிர்பார்ப்பதாக விவசாய குடும்பத்தை சேர்ந்த வழக்கறிஞர் தமிழக முதலமைச்சரின் சொந்த மாவட்டமான சேலம் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 1

0

0