“பிரட்“ சாப்பிட்ட 17 குழந்தைகள் மயக்கம் : விற்பனை செய்தவர் தலைமறைவு

23 May 2020, 2:41 pm
Villupuram Dizzy - Updatenews360
Quick Share

விழுப்புரம் : தெருவில் விற்பனை செய்த பிரட், பிஸ்கட் உள்ளிட்ட உணவு பொருட்களை சாப்பிட 17 குழந்தைகள் வாந்தி, மயக்கத்தால் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விழுப்புரம் அடுத்த  பொய்கை அரசூர் கிராமத்தில் நேற்று மாலைபேக்கரி பொருட்ளான ரொட்டியை தெருக்களில் ஒருவர்  விற்பனை செய்தார்,  அதனை அந்த கிராமத்தில் உள்ள குழந்தைகள் வாங்கி சாப்பிட்டனர். பின்னர் நள்ளிரவில்  சிறுவர்கள் சிறுமிகள் 17 பேர் வாந்தி வயிற்றுப்போக்கு மயக்கம் ஏற்பட்டதை அடுத்து உடல்நிலை மிக மோசமான காரணத்தினால்  108 ஆம்புலன்ஸ் மூலம் அவர்களை அழைத்துச் சென்று விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்துள்ளனர்.

அவர்களுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவர்கள் தொடர்ந்து குழந்தைகளை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். திருவெண்ணெய்நல்லூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து உணவு பண்டங்களை விற்பனை செய்தவரை தீவிரமாக தேடி வருகின்றனர். காலாவதியான பிரட் கேக்கை சாப்பிட்டதால் 17 குழந்தைகள் பாதிக்கப்பட்ட சம்பவம் கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.