வெந்து போன உடலோடு வாக்குமூலம் அளித்த சிறுமி பலி.!!

11 May 2020, 12:28 pm
villupuram Child Fire - Updatenews360
Quick Share

விழுப்புரம் : பள்ளிச் சிறுமி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்தியதாக இருவரை கைது செய்துள்ள நிலையில், சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்த ஜெயபால் மகள் ஜெயஸ்ரீ (வயது 15). இவர் பத்தாம் வகுப்பு படித்து வருகின்றார்.

இவரது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் இருந்து தீப்புகை வெளியானது. அருகிலிருந்த மக்கள் வந்து பார்த்த போது உடலில் தீக்காயத்துடன் சிறுமி எரிந்து இருந்து கொண்டிருந்தார் .இவரை மீட்டு உறவினர்கள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அ

உடனே போலீசார் நேரடியாக வந்து சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது தன்னை கட்டிப்போட்டு முருகன் மற்றும் அவரின் உறவினர் யாசகம் ஆகிய 2 பேரும் பெட்ரோல் ஊற்றி கொளுத்தியதாக விழுப்புரம் குற்றவியல் நீதித்துறை நடுவர் அருண்குமாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

மேலும் அவரின் நிலை மோசமாகவே தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தகவல் அறிந்து திருவெண்ணைநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். இது குறித்த புகாரின் பேரில் முருகன் – யாசகம் ஆகிய இருவரையும் திருவெண்ணைநல்லூர் போலீசார் கைது செய்தனர்..

தற்போது விசாரணையில் 10 ஆம் வகுப்பு மாணவியின் தந்தை ஜெயபால் அவரது தம்பி குமாருக்கும் அதே பகுதியை சேர்ந்த முருகன் மற்றும் அவரின் உறவினர் யாசகம் இடையே கடந்த 2013 ஆண்டு வழக்கு ஒன்றில் முன் விரோதம் இருந்து தெரிய வந்ததுள்ளது.

இந்நிலையில் சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 10ஆம் வகுப்பு சிறுமியை கட்டிப்போட்டு பெட்ரோல் ஊற்றி எரித்ததாக அதிமுக முன்னாள் கவுன்சிலர் உட்பட 2 பேர் கைது செய்யப்ட்டுள்ளது குறிப்பிடதக்கது.