புகுந்த வீட்டில் கொடுமைப்படுத்துவதாக தாயிடம் கதறிய மகள்.! அடுத்த நாள் காத்திருந்த அதிர்ச்சி.!!

12 August 2020, 4:54 pm
Villupuram Murder - Updatenews360
Quick Share

விழுப்புரம் : தாயும் மகனும் சேர்ந்து பெண்ணை எரித்துக் கொன்று விட்டதாக பெற்றோர்கள் புகார் கொடுத்துள்ள சம்பவம் விழுப்புரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விழுப்புரம் பொய்யபாக்கம் கிராமத்தில் தனஞ்செழியன் புனிதவதி தம்பதியரின் மூத்த மகளான சௌமியா, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக அருகிலுள்ள குச்சிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த விழுப்புரம் நகராட்சியில் அலுவலகத்தில் பணிபுரியும் செல்வகுமார் என்பவருடன் திருமணம் நிச்சயம் செய்யயப்பட்டது.

இரண்டு ஆண்டுகளாக திருமண வாழ்க்கை தொடர்ந்த நிலையில் குழந்தைப்பேறு இல்லாத காரணத்தினால் தொடர்ந்து சௌமியாவின் மாமியாரும் கணவரும் கொடுமைப்படுத்தி வந்ததாக தெரிகிறது. ஆடி மாதத்தில் அம்மா வீட்டிற்கு வந்த சௌமியா இந்த கொடுமைகளை பற்றி தனது பெற்றோரிடம் கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

கடந்த எட்டாம் தேதி ஆகஸ்ட் மாதம் தனது கணவர் செல்வகுமார் மீண்டும் தனது வீட்டிற்கு சௌமியாவை அழைத்துச் சென்றுள்ளார். வீட்டிற்கு போனபோது மீண்டும் அதே கொடுமைகள் தொடர ஆரம்பித்துள்ளனர். தொடர்ந்து தனது மாமியார் தன்னை வீட்டிற்கு வந்ததிலிருந்து குத்திகாட்டி தகாத வார்த்தையில் திட்டி வருவதாகவும் வீட்டைவிட்டு வெளியே போய்விடு என்று கூறியதாகவும் தனது தாயிடம் அலைபேசி மூலம் ஞாயிற்றுக்கிழமை 10ஆம் தேதி கூறியுள்ளார்.

இதனைக் கேட்ட தாயார் புனிதவதி, மறுநாள் நேரில் அங்கு வருவதாக கூறி சமாதானப்படுத்தியுள்ளார். இதையடுத்து மகள் வசிக்கும் எதிர் வீட்டிலிருந்து தொலைபேசியவர்கள், உங்கள் மகள் சௌமியா மண்ணெண்ணை ஊற்றி எரித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறியுள்ளனர்.

மேலும் எந்த ஒரு அலறல் சத்தமும் அக்கம்பக்கத்தில் கேட்கவில்லை என்றும் வீட்டில் எந்த பகுதியிலும் தீ படாமல் சௌமியா இறந்து படுத்து கிடந்த இடத்தில் மட்டுமே தீ படர்ந்து இருந்ததாலும் ஆனால் மண்ணெண்ணையை ஊற்றி எரித்து கொண்டதாக அவர்கள் தெரிவிக்கிறார்கள் என்றும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர்.

ஆனால் இது குறித்து செல்வகுமார் வீட்டில் இருந்து பெற்றோருக்கு எந்த ஒரு தகவலும் கொடுக்காத நிலையில் நேற்று சௌமியா வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு அவர் எரிந்த நிலையில் சடலமாக இருந்துள்ளார். தனது மகள் நிச்சயம் தற்கொலை செய்திருக்க மாட்டார் என உறுதியாக இருந்த பெற்றோர்கள் உடனடியாக சம்பவம் குறித்து விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

நேற்றுவரை புகாரை விசாரிக்காமலேயே அலைக்கழித்த காவல் அதிகாரிகள் இன்று மீண்டும் விசாரணையை துவக்கி உள்ளனர். இந்நிலையில் உடற்கூறு ஆய்வுக்காக சௌமியாவின் பிரேதம் விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவமனை கல்லூரியில் இருந்த நிலையில் பெண் உடலை வாங்க மறுத்து பெற்றோர்கள் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இருப்பினும் விழுப்புரம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் நல்லசிவம் நேரடியாக சம்பவ இடத்திற்கு வந்து உரிய தண்டனை பெற்றுத் விசாரணை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்தன் அடிப்படையில் பெற்றோர்கள் பிரேதத்தை பெற்றுக் கொண்டனர்.

குச்சிபாளையம் கிராமமே ஒன்றுகூடி தனது மகளுக்கு எதிராக இந்த சதிக்கு துணை போவதாக பெண்வீட்டு தரப்பினர் பகிரங்கமாக குற்றம் சாட்டுகின்றனர். அதற்கு காவல்துறையும் துணை போவதாகவும் எனவே இதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் நேரடியாக விசாரணை மேற்கொண்டு உரிய நீதியை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Views: - 10

0

0