கடலோர மீனவ கிராமங்களில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு…!!

24 November 2020, 5:56 pm
vlp3 - updatenews360
Quick Share

விழுப்புரம்: வங்கக் கடலில் மையம் கொண்டிருக்கும் நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலோர கிராமங்களில் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

விழுப்புரம் மாவட்ட கடலோர பகுதிகளான மரக்காணம், அழகன்குப்பம் உள்ளிட்ட 19 மீனவ கிராமங்களில் மீனவர்களை படகுகள் வல்லம் கட்டுமரங்கள் ஆகியவை பாதுகாப்பான பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. கடலோரகிராம மக்கள் பாதுகாப்பாக இருப்பதற்கு 12 புயல் பாதுகாப்பு பல்நோக்கு மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

மக்கள் இந்த பல்நோக்கு மையங்களை பயன்படுத்தி கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையத்தில் குடிநீர், மின்சாரம், மருத்துவகுழு உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகள் இருப்பதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். பின்னர் அங்கிருந்து மற்றொரு கிராமத்திற்கு செல்லும் வழியில் மாவட்ட ஆட்சியர் வாகனத்தை வழிமறித்து மீனவ கிராம மக்கள் கோரிக்கை வைத்தனர்.

இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை அந்த கிராமத்திற்கு சென்று அங்கு உள்ள வீடுகளை பார்வையிட்டார். மேலும் வட்டார அரசு அலுவலர்களை பாதுகாப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தவும் உத்தரவிட்டார்.

Views: - 0

0

0