கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு சிறப்பாக செயல்படுகிறது : பிரேமலதா விஜயகாந்த் பாராட்டு

14 May 2020, 5:41 pm
Premalatha Vijayakanth - Updatenews360
Quick Share

விழுப்புரம் : கொரோனா தடுப்பு நடவடிக்கைகளிள் தமிழக அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அடுத்த சிறுமதுரை கிராமத்தில் எரித்து கொலைசெய்யபட்ட சிறுமி ஜெயஸ்ரீ இல்லத்திற்கு சென்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் மனைவியும் தேமுதிக பொருளாளருமான பிரேமலதா விஜயகாந்த் ஜெயஸ்ரீ படத்திற்க்கு அஞ்சலி செலித்தி அவர்கள் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி தேமுதிக தலைவர் விஜயகாந்த் சார்பில் ருபாய்.1 லட்சம் நிதியுதவி அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பிரேமலதா விஜயகாந்த், சிறுமி ஜெயஸ்ரீயை பெட்ரோல் ஊற்றி எரித்த கொலை செய்த குற்றவாளிகளை தூக்கு தண்டனை அல்ல ஆயுள்தண்டனை அல்ல என்கவுன்டர் செய்ய வேண்டும் என்று ஆவேசமாக பேசினார்.
பெண்கள் என்றால் என்ன கிள்ளுக்கீரையா பெண்களுக்கு எதிராக தவறுகள் நடந்தால் நாங்கள் ஒட்டு மொத்தமாக ஒன்று சேர்வோம்..

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளிள் தமிழக அரசு மிக சிறப்பாக செய்பட்டு வந்தது. இருந்தபோதிலும் ஊரடங்கின் போது டாஸ்மாக் கடைகளை திறந்தது தவறு , டாஸ்மாக் கடைகளை திறப்பது குறித்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளது இந்த மனுவின் மீது தேமுதிகவின் சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஊரடங்கு முடியும் வரை டாஸ்மாக் கடையை திறக்க தேமுதிக அனுமதிக்காது. மத்திய அரசின் 20 லட்சம் கோடி திட்டம் இன்னும் 5 , 6 நாட்களில் முழுமையாக வெளியாகும், அதன் பின்னர்தான் கருத்து சொல்ல முடியும் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.