போதை ஏற்றும் சின்ன சின்ன பொட்டலங்கள்.! விசாரணையில் ஷாக்.! 2 பெண்கள் கைது.!!

28 July 2020, 12:06 pm
Villpuram Drug Sales- Updatenews360
Quick Share

விழுப்புரம் : கஞ்சா விற்ற 2 பெண்கள் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து கஞ்சா பொட்டலங்கள் மற்றும் ரொக்கப் பணத்தை பறிமுதல் செய்தனர்.

விழுப்புரம் மாவட்டத்தில், பான்மசாலா, குட்கா, ஹான்ஸ் மற்றும் கஞ்சா உள்ளிட்ட அரசால் தடை செய்த புகையிலை பொருட்களை சட்டவிரோதமாக விற்பனை செய்வோரை கண்காணிக்க, எஸ்.பி., ராதாகிருஷ்ணன் வழிகாட்டுதலின் பேரில், தனிப்படை அமைக்கப்பட்டு, அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.

இதையொட்டி, விழுப்புரம் மாவட்ட தனிப்படை போலீசார், விழுப்புரம் வடக்கு ரயில்வே காலனி பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்றனர்.

அங்கு சோதனை செய்ததில், சட்டத்திற்கு புறம்பாக கஞ்சா விற்பனை செய்த, அப்பகுதியை சேர்ந்த பாலா என்பவரின் மனைவி மகேஸ்வரி, குள்ளராஜா என்பவர் மனைவி அமுதா ஆகியோரை கைது செய்து, அவர்களிடம் இருந்து 3 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பத்து கஞ்சா பொட்டலங்கள் மற்றும் 5 ஆயிரத்து 700 ரூபாயை போலீசார் பறிமுதல் செய்து, வழக்குப் பதிந்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்.