என்கிட்டயேவா…? கீழே விழுந்த மதுபாட்டிலை எடுக்க மதுபிரியர் போட்ட அலப்பறை…வைரல் வீடியோ!!

Author: Babu Lakshmanan
27 June 2022, 5:14 pm
Quick Share

விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் மது பிரியர் ஒருவர் இரண்டு மதுபாட்டிலை கீழே போட்டுவிட்டு அதனை எடுக்க அலப்பறை செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்திற்கு தினந்தோறும் பல்வேறு ஊர்களுக்கு செல்ல ஆயிரக்கணக்கானோர் வருகை புரிந்து செல்கின்றனர். இந்த நிலையில், மது போதையில் ஒருவர் பேருந்து நிலையத்திற்குள் இரண்டு மதுபாட்டில்களை போட்டுவிட்டு, அதனை எடுக்க முடியாமல் தவழ்ந்து எழுந்து கீழே விழுந்துள்ளார்.

ஒரு மணி நேரத்திற்கு மேலாக மது பாட்டிலை எடுக்க மதுபிரியர் அலப்பறையில் ஈடுபட்டதை பேருந்து நிலையத்திற்கு வருகை புரிந்த ஒருவர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ பதிவானது தற்போது விழுப்புரம் பகுதியில் வைரலாகி வருகிறது. மதுப்பிரியரின் அலப்பறை கண்ட பேருந்து பயணி ஒருவர் அப்புறபடுத்தி விட்டு சென்றுள்ளார்.

Views: - 123

0

0