பார்த்தா Original.! உத்து பார்த்தா Duplicate.!போலி மது விற்பனை.!!

21 July 2020, 10:43 am
Fake Liquor - Updatenews360
Quick Share

விழுப்புரம் : கள்ளத்தனமாக அரசு டாஸ்மாக் மதுபாட்டில்கள் போல் போலி ஸ்டிக்கர் ஒட்டி விற்பனை செய்யப்பட்ட நுற்றுக்கனக்கான போலி மதுபாட்டில் பறிமுதல் செய்த போலீசார் ஒருவரை கைது செய்தனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கொரோனா ஊரடங்கு சமையத்தில் டாஸ்மாக் கடைகள் மூடிய பின் மதுபாட்டில்கள் விற்பனை செய்யபடுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிபடையில் இதனை கண்காணிக்கும் வகையில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் காவல்துறையின் தனி படைகள் அமைக்கப்பட்டது.

விழுப்புரம் அடுத்த இந்திரா நகரில் சட்டவிரோதமாக போலி மது பாட்டில்களை விற்பனை செய்யபடுவதாக தனிப்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் அங்கு விரைந்த தனிப்படை காவல்துறை அங்குராஜ் என்பவரை கைது செய்து அவரிடம் நுற்றுக்கணக்கான போலி மதுபாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்க்கு விரைந்து வந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் அங்கு தீவிர விசாரணை மேற்கொண்டார்.. அரசு டாஸ்மாக் மதுபாட்டில்கள் போல் போலி ஸ்டிக்கர் ஒட்டி விற்பனை செய்ததும் விசாரணை தெரியவந்துள்ளது. மேலும் கள்ளத்தனமாக மதுபாட்டில், சாராயம், கஞ்சா விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.