சிறுமி எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் : குற்றவாளிகளுக்கு 15 நாள் நீதிமன்ற காவல்..!

12 May 2020, 10:04 am
villupuram girl - updatenews360
Quick Share

சென்னை : விழுப்புரத்தில் சிறுமி எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் இருவருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரத்தில் முன்விரோதம் காரணமாக 10-ம் வகுப்பு சிறுமியை எரித்து கொலை செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக முருகன், கலியபெருமாள் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சிறுமியை எரித்து கொலை செய்த குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்து வருகிறது.

உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு ரூ. 5லட்சத்தை நிவாரணமாக அறிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, குற்றவாளிகளுக்கு சட்டப்படி கடுமையான தண்டனை வழங்கப்படும் என தெரிவித்தார்

இந்த நிலையில், சிறுமி எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் கைதான முருகன் மற்றும் கலியபெருமாளுக்கு 15 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இருவரும் விழுப்புரம் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.