ஜெயலலிதா பெயரில் புதிய பல்கலைக்கழகம் : பேரவையில் மசோதா தாக்கல்

5 February 2021, 2:12 pm
TN Secretariat - Updatenews360
Quick Share

சென்னை : விழுப்புரத்தில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பெயரில் புதிய பல்கலைக்கழகம் அமைப்பது தொடர்பான மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.

திருவள்ளூர் பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரித்து புதிதாக ஜெயலலிதா பல்கலைக்கழகம் என்னும் கல்வி நிறுவனத்தை உருவாக்கப்படும் என்று கடந்த ஆண்டும் செப்டம்பர் 16ம் தேதி சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார். ஜெயலலிதாவின் நினைவாக உருவாக்கப்படும் இந்தப் பல்கலைக்கழகமானது, விழுப்புரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கல்லூரிகளை நிர்வகிக்கும் அதிகாரம் வழங்கப்படுகிறது.

இந்த நிலையில், சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பெயரில் அமைக்கவிருக்கும் புதிய பல்கலைக்கழகம் குறித்த மசோதாவை, உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் தாக்கல் செய்தார்.

முதலமைச்சர் பழனிசாமியின் உரைக்கு பிறகு தேதி குறிப்பிடாமல் அவை ஒத்திவைக்கப்பட உள்ளது.

Views: - 0

0

0