விவசாய நிலத்தில் மறைத்து வைத்த 400 லிட்டர் எரிசாராயம்.! தலைமறைவான 9 பேர்.!!

29 July 2020, 8:03 pm
Villupuram Spirit Catch - Updatenews360
Quick Share

விழுப்புரம் : விவசாய நிலத்தில் மறைத்துவைத்திருந்த 400 லிட்டர் எரிசாராயம் பறிமுதல் சாராயம் காய்ச்சிய ஒன்பது நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம் வீரபாண்டி கிராமத்தில் சிலர் சாராயம் காய்ச்சுவதாக வந்த தகவலையடுத்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவின்படி, விழுப்புரம் மதுவிலக்கு காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் துறையினர் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

இச்சோதனையின்போது அங்கிருந்த விவசாய நிலத்தில் சுமார் 200 லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு பேரல்களில், 400 லிட்டர் எரிசாராயம் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர், அதனைப் பறிமுதல் செய்த காவல் துறையினர், அவற்றை மண்ணில் கொட்டி அழித்தனர்.

மேலும் இது தொடர்பாக வீரபாண்டி கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன், ஏழுமலை, செல்வகுமார், தாமரை செல்வம், சம்பத், நாராயணன், லக்ஷ்மணன், சரவணன், சுப்பிரமணியன் ஆகிய ஒன்பது பேர் மீது வழக்குப் பதிவு செய்த விழுப்புரம் மதுவிலக்கு காவல் துறையினர், அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.