பள்ளி ஆய்வகத்தில் ஆசிட் கீழே விழுந்து விபத்து : மாணவியின் முகம் வெந்துபோன அதிர்ச்சி சம்பவம்… 3 மாணவிகள் படுகாயம்

Author: Babu Lakshmanan
13 September 2021, 6:34 pm
villupuram acid - updatenews360
Quick Share

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் வள்ளலார் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிட் பாட்டில் தவறுதலாக கீழே விழுந்து வெடித்ததில் பள்ளி மாணவிகள் 4 பேர் காயமடைந்தனர்.

விழுப்புரம் – நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்தில் கண்டமங்கலம் வள்ளலார் அரசினர் மேல்நிலைப் பள்ளியின் கட்டிடம் இடிக்கப்படுவதால், பள்ளியில் உள்ள ஆய்வுக் கூடத்தின் பொருட்களை வேறு இடத்திற்கு மாற்றியமைக்கும் பணி நடைபெற்றது. அப்போது, ஆய்வகத்தில் உள்ள சில பொருட்களை எடுத்துச் செல்ல பாமா (17) , நித்யா (17), ஆதிஷா (16), ஜனனி (17) ஆகியோரை பள்ளியின் தலைமையாசிரியர் ராஜாராமன் அழைத்துச் சென்றார்.

அங்கு பொருட்களை எடுக்கும் போது அங்கிருந்த நைட்ரிக் ஆக்ஸைடு சல்ஃபர் ஆசிட் மீது கால்பட்டு வெடித்து சிதறியது. இதில், பாமா என்கிற மாணவிக்கு முகம் முழுவதும் ஆசிட் பட்டு வெந்து போனது. நித்யா என்கிற மாணவிக்கு கண்களில் அதிகளவு எரிச்சல் ஏற்பட்டும், அதிஷா மற்றும் ஜனனி ஆகியோருக்கு வலது கை மற்றும் கழுத்து பகுதிகளில் லேசான காயமும், ஏற்பட்டது. காயமடைந்த மாணவிகள் அனைவரும் புதுச்சேரி அரியூர் உள்ள வெங்கடேஸ்வரா மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் உள் நோயாளியாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில், பாமா என்ற மாணவிக்கு முகத்தில் அதிகம் காயம் ஏற்பட்டதால் மேல் சிகிச்சைக்காக புதுவை தவளக்குப்பம் அரவிந்த் கண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா, விழுப்புரம் கல்வி அலுவலர் கிருஷ்ணன் நேரில் சென்று, பள்ளி மாணவிகளுக்கு ஆறுதல் கூறி அங்கேயே தங்கி அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்து கவனித்து வருகின்றனர்.

Views: - 243

0

0