பொது இடத்தில் மண் எடுப்பதில் தகராறு ; பகையாளியான பங்காளி.. பைக்கில் சென்ற பாமக நிர்வாகி கொடூரக்கொலை..!!

Author: Babu Lakshmanan
25 November 2022, 8:41 am
Quick Share

விழுப்புரம் ; விழுப்புரம் அருகே பங்காளிக்குள் ஏற்பட்ட விரோதத்தால் பாமக நிர்வாகி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் அருகே உள்ள காப்பியாம்புலியூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆதித்யன். இவர் பாமகவில் மாவட்ட துணை தலைவராக பொறுப்பில் உள்ளார். இந்நிலையில், நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் பனையபுரத்தில் இருந்து விக்கிரவாண்டி – கும்பகோணம் சாலையில் கப்பியாம்புலியூர்க்கு சென்றுக்கொண்டிருந்தார்.

அப்போது, ஊர்க்கு ஒரு கிலோமீட்டர் முன்பு வழி மடக்கிய 5 பேர் கொண்ட கும்பல், கத்தியால் கழுத்து, மார்பு பகுதியில் குத்தியும், கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு இறந்துவிட்டதை உறுதிபடுத்திக்கொண்டு அக்கும்பல் தப்பியுள்ளது. அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து போலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளானர்.

சம்பவ இடத்திற்கு வந்த விக்கிரவாண்டி காவல் நிலைய போலீசார் உடலை பிரேதப் பரிசோதனை செய்ய முண்டியாம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து வந்த அவரின் மனைவி உள்ளிட்ட உறவினர்கள் கதறி அழுதனர்.

அவருக்கும் (ஆதித்யன்), அதே ஊரைச் சேர்ந்த அவருடைய பங்காளிகளான லட்சுமி நாராயணன் என்பவருக்கும் பொது இடத்தில் மண் எடுப்பதில் அடிக்கடி ஏற்பட்ட தகராறு காரணமாக ஆதித்தினை அவருடைய பங்காளிகளே கூலிப்படைகளை ஏவி வெட்டி கொலை செய்துள்ளதாக போலீஸ் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மேலும், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்ட எஸ்.பி ஸ்ரீநாதா கொலையாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைத்துள்ளார். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

Views: - 109

0

0