130 ரூபாய் சரக்கு வாங்க 150 ரூபாய்க்கு குடை வாங்கிய மதுப்பிரியர்கள்.!

16 May 2020, 4:35 pm
Villupuram Umbrella - Updatenews360
Quick Share

விழுப்புரம் : மாஸ்க் அணிந்து குடை பிடித்து வந்தால் மட்டும் மதுபாட்டில் வழங்கப்படும் என காவல்துறை அறிவித்ததால் 130 ரூபாய்க்கு பாட்டில் வாங்க வந்த மதுப்பிரியர்கள் 150 ரூபாய்க்கு குடை வாங்கி வந்தனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தம் 124 கடைகள், இதில் 84 கடைகள் மட்டும் திறக்கப்பட்டது.. விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் காவல்துறை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

காலை முதல் நீண்ட வரிசையில் டோக்கன் பெற்று மதுப்பிரியர்கள் காத்திருந்தனர். 10 மணிக்கு கடும் வெயில் காணப்பட்டது. இருப்பினும் மதுபிரியர்கள் அதனை பொருட்படுதபாமல் நீண்ட வரிசையில் காத்திருந்து பாட்டில்கள் வாங்கி சென்றனர்.

விழுப்புரம் அடுத்த ஜானக்கிபுரம் டாஸ்மாக் கடையில் குடை எடுத்து வந்தால் மட்டும் தான் பாட்டில் வழங்கப்படும் என்று காவல்துறை அறிவிதத்ததால் மதுபிரியர்கள் சிலர் வீட்டிற்க்கு சென்றும் சிலர் கடைக்கு சென்று குடை வாங்கி வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து மதுபாட்டில் வாங்கி சென்றனர். 130 ரூபாய் மதுபாட்டில் வாங்க 150 ரூபாய் க்கு குடை வாங்கி வந்த சம்பவம் அதிர்ச்சி யை ஏற்படுத்தியது. இப்ப மட்டும் எங்கிருந்து வருது இந்த “காசு“.