இந்த ஆண்டும் விநாயகர் சிலை விற்பனையாகாவிட்டால் சாவதைத் தவிர வேறு வழியில்ல : சிலை வடிவமைப்பாளர்கள் உருக்கம்..!!

Author: Babu Lakshmanan
18 August 2021, 11:25 am
Quick Share

தஞ்சை : இந்த ஆண்டும் விநாயகர் சிலை விற்பனை ஆகாவிட்டால் சாவதை தவிர வேறு வழியில்லை என கும்பகோணத்தில் விநாயகர் சிலை தயாரித்து வரும் உத்தரப்பிரதேச மாநில சிலை வடிவமைப்பாளர் வேதனையுடன் தெரிவித்தார்.

கும்பகோணத்தில் இருந்து திருநாகேஸ்வரம் செல்லும் சாலையின் ஓரத்தில் கொட்டகை அமைத்து உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த 20 குடும்பத்தினர், கடந்த 18 ஆண்டுகளாக ஒரு அடி முதல் 11 அடி வரையிலான விநாயகர் சிலைகளை பல்வேறு வடிவங்களில் வடிவமைத்து விற்பனை செய்து வருகின்றனர்.

Vinayagar statue - updatenews360

கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கவும், நீர்நிலைகளில் சிலைகளை கரைக்கவும் தடை விதிக்கப்பட்டது. இதனால், கும்பகோணத்தில் இவர்கள் செய்து வைத்திருந்த விநாயகர் சிலைகள் விற்பனையாகாமல் தேக்கமடைந்தது. இதில் அவர்களுக்கு பல லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த ஆண்டு அடுத்த மாதம் செப்டம்பர் 10ஆம் தேதி வரும் விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக, பொது இடங்களில் பிரதிஷ்டை செய்வதற்காக, ஒரு அடி முதல் 11 அடி வரையிலான மயில்வாகன விநாயகர், நாகராஜ விநாயகர், எலி வாகன விநாயகர் என பல்வேறு வடிவங்களில் கண்ணைக் கவரும் வகையிலான வண்ணங்கள் தீட்டி சிலைகளை தயார்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு மாவட்டங்களுக்கு ஆர்டரின் பெயரில் 2000 விநாயகர் சிலைகளுக்கு மேல் விற்பனை செய்யப்படுவதாகும். கடந்தாண்டு விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடபடாத நிலையில், இந்த ஆண்டும் அதே நிலைமை நீடிப்பதால், இதுவரை வெறும் மூன்று விநாயகர் சிலைகளுக்கு மட்டுமே ஆர்டர் வந்துள்ளதாகவும், எப்படியும் விழா நடைபெறும் என்ற நம்பிக்கையில், கடன்வாங்கி 100 விநாயகர் சிலைகளை தயார் செய்து வருவதாகவும், இவை விற்பனை ஆகாவிட்டால் சாவதை தவிர வேறு வழியில்லை என கும்பகோணத்தில் விநாயகர் சிலை வடிவமைத்து வரும் உத்தரப்பிரதேச சிலை வடிவமைப்பாளர் உம்மர் வேதனையுடன் தெரிவித்தார்.

Views: - 168

0

0