அரசியல் சட்டத்தை மீறினால் கடும் எதிர்விளைவுகள் ஏற்படும் : ஆளுநரை எச்சரிக்கும் காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசு!!

Author: Udayachandran RadhaKrishnan
27 April 2022, 2:04 pm
MP Thirunavukkarasu -Updatenews360
Quick Share

திருச்சி : கவர்னர் அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு நடக்கவில்லை என்றால் எதிர்விளைவுகள் ஏற்படத்தான் செய்யும் என காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் நடைபெறும் மருத்துவ முகாம் நிகழ்ச்சிகளுக்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் வந்தார்.

அப்போது அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தஞ்சையில் தேரோட்டத்தின்போது ஏற்பட்ட விபத்தில் 11 பேர் பலியாகி உள்ளனர். மேலும் சில கவலைக்கிடமாகவும், காயமடைந்து உள்ளனர் அதற்கு முதல் வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

இது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்கு சென்று நேரில் பார்வையிட்டு ஆறுதல் தெரிவிக்க உள்ளார் வரவேற்கிறேன். மேலும், தமிழக அரசு இறந்த ஒரு நபர்களுக்கு தலா ரூ 5 லட்சம் நிவாரண நிதி அறிவித்து உள்ளது. அதனை அதிகப்படுத்தி வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள், மசோதாக்கள் அனைத்தையும் ஆளுநர், அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு அணுகி சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டமன்றத்தில் இரண்டு முறை நீட் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அவருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை மத்திய அரசுக்கோ, குடியாரசு தலைவருக்கோ, பிரதமருக்கோ, உரிய அமைச்சருக்கோ FAX மூலமாகவோ, இ-மெயில் மூலமாகவோ அனுப்ப முடியும். ஆனால் ஆளுநர் மூலமாக அனுப்ப வேண்டும் என அரசியல் சட்டம் சொல்கிறது. அதன்படி அவருக்கு அனுப்ப வேண்டி உள்ளது.

அதற்கு முடிவு எடுக்கும் அதிகாரம் அவருக்கு இல்லை. அதனை அனுப்பி வைப்பது தான் அவர் வேலை. சட்டமன்றத்தில் பெரும்பான்மை பெற்ற ஒரு முதலமைச்சர் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பினால், அதை அவர் அனுப்பாமல் இருப்பது அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு அவர் செயல்படவில்லை என்பதை காட்டுகிறது. அதனால்தான் அவருக்கு கண்டனமும், எதிர்ப்பும் வருகிறது.

துணைவேந்தர் மாநாடு தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், எந்த வினையாக இருந்தாலும் அதற்கு எதிர்வினை இருக்கத்தான் செய்யும். ஆளுநர் கல்வி அமைச்சருக்கு தெரியாமல், கல்வி துறை செயலாளருக்கும் தெரியாமல், அரசு அலுவலர்களுக்கு தெரியாமல் அவரால் ஒரு மாநாட்டைக் கூட்ட வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது.

அங்கு என்ன தீர்மானம் நிறைவேற்றினாலும் தமிழக அரசு தான் அதனை செயல்படுத்த வேண்டும். அவரே அதை நடைமுறைப்படுத்த முடியாது. இங்கு என்ன ஆளுநர் ஆட்சியா நடக்கிறது. அவர் இப்படி நடப்பதால் மாற்று என்ன

துணைவேந்தர்களை தமிழக அரசோ, முதல்வர் எடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்ற வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இது ஆளுநரின் செயல்பாட்டால் வருகிறது. பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.

முதல்வர் ஆளுநர் கட்டுப்பட்டவர் என பிரச்சாரத்தை வலதுசாரிகள் மேற்கொண்டு வருகின்றனர் என்று எழுப்பிய கேள்விக்கு, ஆளுநரை மத்திய அரசு நியமிக்கிறது. மத்திய அரசு பாஜக எனவே இங்கு பாஜகவினர் தங்களுடைய ஆளுநர் என நினைத்துக் கொண்டு கவர்னருக்கு ஆதரவாக பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆளுநர் யாரால் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பதை காட்டிலும் அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு செயல்படுகிறாரா என்பது தான் பிரச்சனை. இல்லை என்றால் எதிர் பிரச்சனைகள், எதிர் விளைவுகள் ஏற்படத்தான் செய்யும் என தெரிவித்தார்.

Views: - 835

0

0