முதலமைச்சரிடம் விருது பெற்ற விருதுநகர் நாயகர்கள்.! ஆட்சியர் அழைத்து கவுரவிப்பு.!!

18 August 2020, 12:04 pm
Viruthunagar Awared - Updatenews360
Quick Share

விருதுநகர் : தமிழக முதல்வர் கையால் சிறந்த முன் கள பணியாளர்கள் விருது பெற்ற விருதுநகர் மாவட்டத்தை இருவரை மாவட்ட ஆட்சியர் கண்ணன் நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்து கௌரவப்படுத்தினார்

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க கடந்த மார்ச் மாதம் முதல் அரசு அதிகாரிகள் இரவு பகல் பாராமல் பணியாற்றி வருகின்றனர். அவர்களை ஊக்குவிக்கும் விதமாகவும் சிறப்பாக பணியாற்றிய பணியாளர்களை பாராட்டும் விதமாக தமிழக அரசு பல்வேறு துறைகளை சார்ந்த 27 நபர்களை தேர்வு செய்து சென்னையில் நடந்த சுதந்திர தின விழாவில் தமிழக முதல்வர் கையால் சிறந்த முன் களப்பணியாளர்கள் என்ற விருதையும் அதற்கான சான்றிதழ்ளையும் வழங்கியது

தமிழகத்திலேயே விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த விருதுநகர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் உமா என்ற பெண் மருத்துவரும் அருப்புக்கோட்டை கஞ்சநாயக்கன்பட்டி சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர் பிரித்திவிராஜ் இருவரை தேர்வு செய்து சிறந்த முன் களப்பணியாளர்கள் விருதைப் பெற்றனர்.

இந்த விருது பெற்ற இருவரையும் மாவட்ட ஆட்சியர் கண்ணன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடை பெற்ற கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் நேரில் வரவழைத்து தனது பாராட்டை தெரிவித்து விருது பெற்றவர்களை கௌரவித்தார்

Views: - 31

0

0