“மீண்டும் முதலமைச்சராவார் எடப்பாடியார்“ : ஹெலிகாப்டரில் வந்து ஆண்டாளை தரிசித்த அதிமுக பிரமுகர் உறுதி!!

23 September 2020, 6:33 pm
Admk Helicopter - updatenews360
Quick Share

விருதுநகர் : அம்மாவின் ஆட்சி தொடர வேண்டும், எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சராக வேண்டும் என ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளை வேண்டிகொண்டதாக் கோவையில் இருந்து ஹெலிகாப்டரில் வந்திறங்கிய அதிமுக பிரமுகர் தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் கோவையை சேர்ந்த அதிமுக இளைஞர் பாசறை மாநில துணை செயலாளர் விஷ்ணுபிரபு என்பவர் ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ள தனியார் பள்ளி மைதானத்தில் ஹெலிகாப்டரில் வந்து இறங்கினார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மீண்டும் முதல்வராக வேண்டியும் தமிழகத்தில் அம்மாவின் ஆட்சி தொடர்ந்து அமைய வேண்டும் என்று உலக பிரசித்தி பெற்ற தமிழ்நாடு முத்திரைச் சின்னமாக விளங்கும் ராஜகோபுரம் அமைந்திருக்கும் ஆண்டாள் கோவிலில் உள்ள சக்கரத்தாழ்வார் கோவிலில் சிறப்பு சுதர்ஷன் யாகம் (எதிரிகளை அழிக்க கூடியது)வளர்த்தும், அபிஷேகம் செய்து வழிபட்டார்.

அதன் பிறகு ஆண்டாள் சன்னதியில் தாயாருக்கு பூஜைகள் செய்தார். இவரை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பான வரவேற்பு அளித்தனர். சுமார் 2 மணி நேரம் சிறப்பு யாகங்கள் வளர்க்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விஷ்ணுபிரபு, அதிமுக ஆட்சி மீண்டும் மூன்றாவது முறையாக தொடர வேண்டுமென ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் சிறப்பு யாகம் நடைபெற்றது. அதிமுக கட்சி 1972ல் தொடங்கப்பட்டது. வருகிற 2021 ஆம் ஆண்டு அக்டோபர் 17-ஆம் தேதி 49 ஆம் ஆண்டு நிறைவுபெற்று 50வது ஆண்டு பொன்விழா ஆண்டு துவங்க உள்ள சிறப்புமிக்க ஆண்டு ஆகும்.

சிறப்பு யாகம் குறித்த கேள்விக்கு, முதல்வர் துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் அனைவரும் கொரோனாவிலிருந்து தமிழகம் மீள பெரிய முயற்சி எடுத்து வருகின்றனர் அந்த முயற்சி வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவும் அதிமுக ஆட்சி தொடர வேண்டும் என்பதற்காகவும் இந்த சிறப்பு யாகம் நடத்தப்பட்டது என்றார்.

திமுக ஆட்சி காலத்தில் நில அபகரிப்பு, மின்வெட்டு போன்ற பிரச்சனையில் தமிழகம் இருந்து வந்த போது அதிமுக கட்சி ஆட்சிக்கு வந்து அவற்றை சரி செய்து மக்களுக்கு நிம்மதியான ஆட்சியை வழங்கியது. மேலும் வருகிற தேர்தலில் தர்மபுரி தொகுதியில் போட்டியிட உள்ளதாகவும் 2011 ஆம் ஆண்டு அதிமுக பொதுக்குழுவில் ஜெயலலிதா அவர்கள் கூறும் பொழுது இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை தான் 2011 வெற்றிக்கு காரணம் என கூறினார் என்று தெரிவித்தார்.