‘பாலினம் மாறினாலும் பாசம் விட்டுப் போகாது’ : திருநங்கையை மணந்த தாய் மாமன்..!

5 September 2020, 6:38 pm
transgender mrg- - updatenews360
Quick Share

விருதுநகரில் திருநங்கையாக மாறிய உறவினரை காதலித்து சொந்த தாய்மாமனே கரம் பிடித்த சம்பவம் அனைவரிடத்திலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காரியாபட்டியை அடுத்த தோணுகால் வலையங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பசாமி (24). இவர் தனது உடலில் ஏற்பட்ட மாறுதல்களால், 2 ஆண்டுகளுக்கு முன்பு திருநங்கையாக மாறினார். மேலும், தனது பெயரை ஹரினா எனவும் மாற்றிக் கொண்டார். இப்படியிருக்கையில், ஹரினா திருநங்கையாக மாறியது தெரிந்தும் அதே கிராமத்தைச் சேர்ந்த சொந்த தாய் மாமன் கருப்பசாமி (27) அவரை காதலித்து வந்துள்ளார். தாய் மாமனின் காதலை ஹரினாவும் ஏற்க மறுக்கவில்லை.

சுமார் ஒரு ஆண்டாக இருவரும் காதலித்து வந்த நிலையில், இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து, கருப்பசாமி தனது பெற்றோரிடம் விஷயத்தை கூறியுள்ளார். இதற்கு ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கருப்பசாமியின் பிடிவாதத்தினால், பின்னர் சம்மதம் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து, இரு வீட்டாரின் சம்மதத்துடன் காரியாப்பட்டி சுப்பிரமணியர் சுவாமி கோவிலில் ஹரினா – கருப்பசாமிக்கு திருணம் நடைபெற்றது. இரு வீட்டாரின் குடும்பத்தினர் மட்டுமின்றி, திருநங்கைகள் முன் நின்று இவர்களின் திருமணத்தை மனதார நடத்தி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Views: - 4

0

0