வ.உ.சியின் 151வது பிறந்தநாள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை… கலைவாணர் அரங்கில் ஒளிபரப்பாகும் கப்பலோட்டிய தமிழன் திரைப்படம்!!

Author: Udayachandran RadhaKrishnan
5 September 2022, 10:48 am
VOC - Updatenews360
Quick Share

வ.உ.சி.யின் 151-வது பிறந்தநாளையொட்டி, அவரது உருவப்படத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் (வ.உ.சி.) 151-வது பிறந்தநாள் தமிழ்நாடு அரசின் சார்பில் இன்று கொண்டாடப்படுகிறது. சென்னை துறைமுக வளாகத்தில் உள்ள வ.உ.சி. சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதில் தமிழக அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு உயர் அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

மேலும், வ.உ.சி. பிறந்த நாளை முன்னிட்டு சென்னை, கலைவாணர் அரங்கில் ‘கப்பலோட்டிய தமிழன்’ படம் இன்றும், நாளையும் காலை 10.30 மணி மற்றும் பிற்பகல் 2 மணிக்கும் என 2 காட்சிகளாக ‘டிஜிட்டல்’ முறையில் திரையிடப்படவுள்ளது.

Views: - 139

0

0