ஓபிஎஸ் வீட்டின் முன் குவிந்த தொண்டர்கள் : தேனியில் இறுதி மரியாதை செலுத்த நீண்ட தூரம் காத்திருக்கும் மக்கள்!

Author: Udayachandran RadhaKrishnan
1 September 2021, 6:04 pm
Theni OPS Home -Updatenews360
Quick Share

தேனி : முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் மனைவியின் மறைவையொட்டி அவரது இல்லம் முன்பு இறுதி மரியாதை செலுத்த ஏராளமான தொண்டர்கள், மாற்றுகட்சியினர், பொதுமக்கள் காத்திருந்து வருகின்றனர்.

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும் போடி சட்டமன்ற உறுப்பினருமான ஓ.பன்னீர் செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று காலை மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில் அவரது உடலுக்கு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட பலர் நேரில் சென்று இரங்கல் தெரிவித்ததுடன் ஓபிஎஸ்-க்கு ஆறுதல் கூறினர்.

மேலும் திருமதி சசிகலா அவர்கள் மருத்துவமனைக்கு நேரில் சென்று ஓபிஎஸ் கையை அணைத்தப்படி ஆறுதல் கூறினார். இந்த நிலையில் ஓபிஎஸ் மனைவியின் உடல் சொந்த ஊரான தேனி பெரியகுளத்திற்கு சாலை மார்க்கமாக கொண்டு வரப்படுகிறது.

இதற்காக தேனி பெரியகுளத்தில் உள்ள ஓபிஎஸ் இல்லத்தின் முன் ஏராளமான அதிமுக தொண்டர்களும், மற்ற கட்சியினர், உறவினர்கள், பொதுமக்கள் இறுதி மரியாதை செலுத்துவதற்காக நீண்ட நேரமாக காத்திருந்து வருகின்றனர்

ஓபிஎஸ் மற்றும் அவரது மனைவி விஜயலட்சுமி தம்பதிக்கு கவிதா பானு என்ற மகளும் தேனி பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் மற்றும் ஜெயபிரதீப் என்ற 2 மகன்களும் உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

Views: - 311

0

0