முதல் அலையில் ஒண்ணு.. இரண்டாவது அலையில் ரெண்டு : முகக்கவசங்களை இலவசமாக வழங்கி வரும் தன்னார்வலர்!!

15 June 2021, 6:21 pm
Free Mask - Updatenews360
Quick Share

ஈரோடு : கொரோனா வேகமாக பரவி வரும் சத்தியமங்கலத்தில் தனது சொந்த செலவில் பொதுமக்களுக்கு இலவசமாக பத்தாயிரம் முக கவசம் வழங்கிய தன்னார்வலருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை சேர்ந்த தன்னார்வலர் மூர்த்தி பைக் மெக்கானிக் தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த ஆண்டு கொரோனோ முதல் அலையின் தொடக்கத்தின் போது தன்னுடைய சொந்த செலவில் காட்டன் துணிகளால் ஆன முக கவசம் வீட்டிலேயே தயாரித்து பொதுமக்களுக்கு வழங்கி வந்தார்.

தற்போது கொரோனா இரண்டாம் அலை ஈரோடு மாவட்டத்தில் வேகமாக பரவி வரும் நிலையில் பொதுமக்களின் நலன் கருதி சத்தியமங்கலம் காவல் துணை கண்காணிப்பாளர் சுப்பையா, வட்டாட்சியர் ரவிசங்கர் மற்றும் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் ஆகியோர் தலைமையில் சுமார் 10,000 முக கவசங்கள் மற்றும் சானிடைசர்களை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கினார்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காவல் துணை கண்காணிப்பாளர் சுப்பையா பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அனைவரும் இரண்டு முக கவசம் அணிந்து தங்களையும் தங்கள் குடும்பத்தையும் பாதுகாத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.

கொரோனா தொற்று காலத்தில் பொதுமக்களின் நலன் கருதி இலவசமாக முக கவசம் வழங்கி வரும் தன்னார்வலர் மூர்த்திக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Views: - 141

0

0